வேம்பநாடு ரயில் பாலம்

வேம்பநாடு ரயில் பாலம் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள எடப்பள்ளி, வல்லார்பாதம் ஆகிய இடங்களை இணைக்கிறது. கட்டப்படுகையில் இதுவே இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலமாக இருந்தது. தற்போது இந்தியாவில் நீர்நிலைகளுக்கு மேலிருக்கும் மிக நீளமான பாலங்களுள் இது நான்காவதாக உள்ளது. இப்பாலம் சரக்குப் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

பிற பெயர்கள் எடப்பள்ளி-வல்லார்பாதம் பாலம்
போக்குவரத்து ரயில்
தாண்டுவது வேம்பநாட்டு ஏரி
இடம் கொச்சி
வடிவமைப்பு விட்டபாலம் (கற்காரை)
கட்டுமானப் பொருள் முன் தகைவுக் கற்காரை
மொத்த நீளம் 4.62 கி.மீ
அகலம் 5 மீட்டர்
உயரம் 7.5 மீட்டர்
இடைத்தூண் எண்ணிக்கை 132
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து 15 தொடர்வண்டிகள்
கட்டியவர் அஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்
AFCONS Infrastructure Ltd
கட்டுமானம் தொடங்கிய தேதி சூன் 2007
கட்டுமானம் முடிந்த தேதி 31 மார்ச்சு 2010
அமைவு 10°00′22″N 76°15′29″E / 10.006°N 76.258°E / 10.006; 76.258

கட்டுமானம் தொகு

இந்த ரயில் பாலம், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், (RVNL) என்ற ஒரு இந்திய அரசு நிறுவனத்தால் சூன் 2007-இல் கட்டத்தொடங்கப்பட்ட இப்பாலம் 2010 மார்ச்சுத் திங்கள் முடிக்கப்பட்டது. இப்பாலத்தின் நீளம் 4.62 கிலோமீட்டர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்பநாடு_ரயில்_பாலம்&oldid=3730528" இலிருந்து மீள்விக்கப்பட்டது