வே. அ. கந்தையா

வே. அ. கந்தையா (V. A. Kandiah, செப்டம்பர் 3, 1891 - சூன் 4, 1963) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வி. ஏ. கந்தையா
V. A. Kandiah
1959 வார்சாவில் நடைபெற்ற நாடாளுமன்றங்களின் மாநாட்டில் வி. ஏ. கந்தையா
இலங்கை நாடாளுமன்றம்
ஊர்காவற்துறை
பதவியில்
1956–1963
முன்னையவர்அல்பிரட் தம்பையா, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
பின்னவர்வி. நவரத்தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1891-09-03)3 செப்டம்பர் 1891
இறப்பு4 சூன் 1963(1963-06-04) (அகவை 71)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிள்ளைகள்2 ஆண்கள், 3 பெண்கள்
முன்னாள் கல்லூரிகொழும்பு சட்டக் கல்லூரி
இலண்டன் பல்கலைக்கழகம்
புனித யோசேப்பு கல்லூரி, கொழும்பு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தொழில்வழக்கறிஞர், ஆசிரியர்
இனம்இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

கந்தையா இலங்கையின் வடக்கே வேலணை, வங்களாவடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை வேலுப்பிள்ளை அம்பலவாணர், தாயார் இராசம்மா. இவருடன் உடன்பிறந்தவர்கள் சொர்ணலட்சுமி, இராசலட்சுமி, சுந்தரம்பிள்ளை. ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையில் பெற்றார்.[1] பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற கந்தையா, இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர் சிறிது காலம் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞராகக் கொழும்பில் பணியாற்றினார்.

அரசியல் வாழ்வு

தொகு

1947 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] அதன் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து 1956 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] மார்ச்சு 1960, சூலை 1960 தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5]

சமூகப் பணி

தொகு

வி. ஏ. கந்தையா 1954 ஏப்ரலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் புங்குடுதீவு மகாசன சபையின் ஆதரவுடன் சிலப்பதிகார விழா ஒன்றை நடத்தினார். புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகத்தில் இருந்து ம. பொ. சிவஞானம், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் உட்பட தமிழறிஞர்கள் பலர் சிறப்புப் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.[1]

வே. ஆ. கந்தையா 1953-54 காலப்பகுதியில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து பணியாற்றினார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "வெள்ளிவிழா கண்ட இலங்கைத் தமிழரசு கட்சியின் சாதனைகள்". வீரகேசரி. டிசம்பர் 14, 2014. 
  2. 1947%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 1956%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 1960 03 19%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 1960 07 20%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "கொழும்பு தமிழ்ச் சங்கம் பொன்விழாப் போற்றிசை (1942-1992)". கொழும்புத் தமிழ்ச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 22 மே 2016.
  • ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 78–79.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._அ._கந்தையா&oldid=3327662" இலிருந்து மீள்விக்கப்பட்டது