வைக்கிங் 1(Viking 1) என்பது நாசாவால் செவ்வாய் கோளை ஆராய்வதற்காக வைக்கிங் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் ஆகும்[2]. இதனுடன் வைக்கிங் 2 என்ற விண்கலமும் அனுப்பப்பட்டது. வைக்கிங் 1 இறங்கு விண்கலத்தான் செவ்வாய் கோளில் வெற்றிகரமாக இறங்கி தனது பணியை தொடங்கிய முதல் இறங்கு விண்கலம் ஆகும், மேலும் இது 2307 நாட்கள் (2245 செவ்வாய் நாட்கள்) இதன் பணியை செய்துள்ளது, இதன் சாதனையை 19 மே 2010 ஆப்பர்சூனிட்டி தளவுளவி முறியடித்தது[3].

வைக்கிங் 1 விண் சுற்றுக்கலன்
வைக்கிங் சுற்றுக்கலன்
இயக்குபவர்நாசா
முதன்மை ஒப்பந்தக்காரர்ஜெட் ப்ரோபுல்சியன் ஆய்வகம்
திட்ட வகைவிண் சுற்றுக்கலன்
செயற்கைக்கோள்செவ்வாய் (கோள்)
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள்ஜூன் 19, 1976[1][2]
ஏவப்பட்ட நாள்ஆகஸ்ட் 20, 1975[1][2]
ஏவுகலம்டைடன் IIIE/செண்டூர்
திட்டக் காலம்ஆகஸ்ட் 20, 1975[2] முதல்
ஆகஸ்ட் 17, 1980[2]
1824 நாட்கள்
தே.வி.அ.த.மை எண்1975-075A
இணைய தளம்Viking Project Information
நிறை883 கிகி
திறன்620 வா
சுற்றுப்பாதை உறுப்புகள்
சுற்றுப்பாதையின் வட்டவிலகல்.882213138
சாய்வு39.3°
சேய்மைநிலை56000 கிமீ
அண்மைநிலை320 கிமீ
சுற்றுக்காலம்47.26 மணி

ஆகஸ்ட் 20, 1975 இல் வைக்கிங் 1 ஏவப்பட்டது, தனது 10 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கோளை அடைந்தது பின் 5 நாட்கள் செவ்வாய் கோளினை வெளிப்புறமாக புகைப்படம் எடுத்து அனுப்பியது அதன்பின் ஜூலை 4, 1976 இல் இதை தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் தரை பாதுகாப்பாக இல்லததால் ஜூலை 20, 1976 இல் செவ்வாயில் தரையிறங்கியது.

விண் சுற்றுக்கலன்

தொகு

வைக்கிங் 1 விண் சுற்றுக்கலனில் இரண்டு வீடிகான் புகைப்படக் கருவிகள் அமைக்கப்பட்டிருந்தது.ஒன்று நீராவி வரைபடத்தை தயர் செய்ய உதவும் அகச்சிவப்பு நிறமாலை மானி (Infrared spectrometer) மற்றொன்று வெப்ப வரைபடத்தை தயர் செய்ய உதவும் அகச்சிவப்பு கதிர்வீசல்மானி.

வைக்கிங் 1 புகைப்படத் தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Nelson, Jon. "Viking 1". நாசா. பார்க்கப்பட்ட நாள் February 2, 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Williams, David R. Dr. (December 18, 2006). "Viking Mission to Mars". நாசா. பார்க்கப்பட்ட நாள் February 2, 2014.
  3. http://marsrovers.jpl.nasa.gov/mission/status_opportunity.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கிங்_1&oldid=2765953" இலிருந்து மீள்விக்கப்பட்டது