வைன்யகுப்தர்

வைன்யகுப்தர் (Vainyagupta) (சமக்கிருதம்: वैन्यगुप्त) 15வது குப்தப் பேரரசரான இவர் மிகக் குறைவாக அறியப்பட்டவர். இவர் காலத்தில் சகர்களின் படையெடுப்பால், குப்தப் பேரரசு தற்கால பிகார் மற்றும் வங்காளம் அளவிற்கு குறுகிப் போனது.

நாலந்தாவில் கிடைத்த உடைந்த களிமண் முத்திரைகள் மற்றும் தற்கால வங்காள தேசத்தின் கொமில்லா மாவட்டத்தில் உள்ள குணைகர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் மூலம், வைன்யகுப்தர் கிபி 507-இல் குப்தப் பேரரசை ஆண்டார் என்றும், விஷ்ணு மற்றும் சிவனை வழிப்பட்டவர் எனத் தெரிகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Agarwal, Ashvini (1989), Rise and Fall of the Imperial Guptas, தில்லி: Motilal Banarsidass, pp. 232–6, ISBN 81-208-0592-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைன்யகுப்தர்&oldid=3760376" இலிருந்து மீள்விக்கப்பட்டது