வையாபுரி (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

வையாபுரி ஒரு நகைச்சுவை நடிகர். தேனி அருகிலுள்ள முத்துத்தேவன்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவரது இயற்பெயர் இராமகிருஷ்ணன்.

வையாபுரி
பிறப்புஇராமகிருஷ்ணன்
19 செப்டம்பர் 1968 (1968-09-19) (அகவை 55)
தேனி, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஆனந்தி

திரைப்படத் துறை அனுபவம் தொகு

இவர் எட்டாம் வகுப்பு வரை முத்துத்தேவன் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை பழனிசெட்டிபட்டி, பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அதன் பின்பு தேனியிலுள்ள மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்தார். திரைப்படத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தில் சென்னைக்குச் சென்ற இவர் முதலில் திரைப்படத்துறையில் பல வேலைகளைச் செய்தார். சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்ன மருது பெரிய மருது”, “மால்குடி டேஸ்” போன்ற தொடர்களில் நடிக்கத் தொடங்கிய இவரை “இளைய ராகம்” எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்க வைத்தார். அதன் பிறகு “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தில் திருநங்கை வேடத்தின் மூலம் பெயர் பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என 250 படங்களுக்கும் மேல் நகைச்சுவை நடிகராக நடித்து விட்டார்.

குடும்பம் தொகு

2001 ஆம் ஆண்டில் ஆனந்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஷ்ரவன் என்கிற மகனும், ஷிவானி என்கிற மகளும் உள்ளனர்.

நடித்துள்ள திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் வேடம் குறிப்புகள்
1995 செல்லக்கண்ணு
1996 அவ்வை சண்முகி
1997 காதலுக்கு மரியாதை
லவ்டுடே
காதலே நிம்மதி
ப்ரியமுடன்
ராமன் அப்துல்லா
காதல் பள்ளி
1998 சொல்லாமலே
காதலா காதலா
மறுமலர்ச்சி
சந்திப்போமா
ஜாலி
தினந்தோறும்
செந்தூரன்
அரிச்சந்திரா
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
ஆசையில் ஒரு கடிதம் ஜம்புலிங்கம்
கண்ணெதிரே தோன்றினாள்
1999 உன்னைத் தேடி
துள்ளாத மனம் துள்ளும்
நீ வருவாய் என
கள்ளழகர்
மானசீகக் காதல்
நினைவிருக்கும் வரை
ஊட்டி
பெரியண்ணா
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
டைம்
அன்புள்ள காதலுக்கு
பூமகள் ஊர்வலம் முனியாண்டி
அன்புடன்
அமர்க்களம்
2000 குட்லக்
சுதந்திரம்
தை பொறந்தாச்சு
பெண்ணின் மனதைத் தொட்டு
ரிதம்
பிரியமானவளே
என்னவளே
2001 அல்லி அர்ஜூனா
சாக்லெட்
அற்புதம்
தில்
மஜ்னு
பார்வை ஒன்றே போதுமே
சொன்னால்தான் காதலா
காதல் பூக்கள்
பூவெல்லாம் உன் வாசம்
வீட்டோட மாப்பிள்ளை
டும் டும் டும்
2002 என் மன வானில்
ஏழுமலை
ஜெமினி
நைனா
அற்புதம்
மிலிட்டரி
பம்மல் கே. சம்மந்தம்
ராஜா
2003 மனசெல்லாம்
அலாவுதீன்
நள தமயந்தி
2004 அருள்
ஜனா
காதல் எப் எம்
அடிதடி
அட்டகாசம்
விஸ்வதுளசி
எம். குமரன் S/o மகாலட்சுமி
2005 காதல் செய்ய விரும்பு
கொச்சி ராசாவு மலையாளத் திரைப்படம்
மும்பை எக்ஸ்பிரஸ் Johnson
சிவகாசி
2007 போக்கிரி
வசந்தம் வந்தாச்சு
2008 தசாவதாரம் பிரபு
குசேலன்
சாது மிரண்டால்
நாயகன்
பாண்டி
திருவண்ணாமலை
நடிகை
2009 வில்லு
மாயாண்டி குடும்பத்தார்
உன்னைக் கண் தேடுதே
நாளை நமதே
மூணாறு
2010 இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் விருமா
துணிச்சல்
கொல கொலையா முந்திரிக்கா கான்ஸ்டபிள் ராசப்பன்
காக்க கனகவேல் காக்க
ராவணன் ராசாத்தி
கல்யாணமாம் கல்யாணம் மலையாளத் திரைப்படம்
பலே பாண்டியா
சிக்குபுக்கு சிங்காரம்
அன்றொரு நாள்
2011 காவலன்
முத்துக்கு முத்தாக
மாப்பிள்ளை
சபாஷ் சரியான போட்டி
வேலூர் மாவட்டம்
வேலாயுதம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வையாபுரி_(நடிகர்)&oldid=2717095" இலிருந்து மீள்விக்கப்பட்டது