வோன் பேயர் பெயரிடல்

வோன் பேயர் பெயரிடல் (Von Baeyer nomenclature) என்பது பல்வளைய ஐதரோகார்பன்களை விவரிக்கப் பயன்படும் ஒர் அமைப்பு முறையாகும். இந்தப் பெயரிடும் முறை முதலில் 1900 ஆம் ஆண்டு அடால்ஃப் வோன் பேயரால் இருவளைய சேர்மங்களுக்காக உருவாக்கப்பட்டது[1]. பின்னர் 1913 ஆம் ஆண்டில் எட்வர்டு புக்னர் மற்றும் வில்லெம் வைகண்டு ஆகியோரால் மூவளைய சேர்மங்களுக்காக விரிவாக்கப்பட்டது[2]. பின்னாளில் கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிட்டு முறைப்படுத்தும் ஐயுபிஏசி அமைப்பும் இம்முறையை ஏற்றுக் கொண்டு மேலும் விரிவுபடுத்தியது. இத்திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட நவீன பதிப்புகள் வளையங்களின் குறியீட்டு எண்கள், பல்வளைய சேர்மங்கள், நிறைவுறா சேர்மங்கள் போன்றவற்றையும் விவரிக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளன[3].

பைசைக்ளோ[4,4.0]டெக்கேன் அல்லது டெக்காலின் சேர்மத்தின் எண்ணிடப்பட்ட வாய்ப்பாட்டுக் கூடு

மேற்கோள்கள் தொகு

  1. Adolf Baeyer: Systematik und Nomenclatur bicyclischer Kohlenwasserstoffe.
  2. E. Buchner, W. Weigand: Bornylen und Diazoessigester [Nebst einer Nomenklatur tricyclischer Kohlenstoff-Ringsysteme nach Adolf von Baeyer].
  3. Favre, Henri A.; Powell, Warren H., தொகுப்பாசிரியர்கள் (2013). Nomenclature of Organic Chemistry – IUPAC Recommendation and Preferred names 2013. IUPAC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4.  Extensive errata to this book has published online as: Moss, G. P. (ed.). "Corrections to Nomenclature of Organic Chemistry. IUPAC Recommendations and Preferred Names 2013". IUPAC.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோன்_பேயர்_பெயரிடல்&oldid=2630662" இலிருந்து மீள்விக்கப்பட்டது