வோல்போர்தைட்டு

பல்வனேடேட்டு கனிமம்

வோல்போர்தைட்டு (Volborthite) என்பது Cu3V2O7(OH)2·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமத்தில் தாமிரமும் வனேடியமும் கலந்துள்ளன. முதலில் 1838 ஆம் ஆண்டில் உருசியாவின் யூரல் மலைத்தொடரில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் கினாபைட்டு என்று என்று பெயரிடப்பட்டது. ஆனால் பின்னர் உருசிய தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் வான் வோல்போர்த் (1800-1876) நினைவாக வோல்போர்தைட்டு என மாற்றப்பட்டது.[4]

வோல்போர்தைட்டு
Volborthite
வோல்போர்தைட்டின் நியான் பச்சை நிற படிகங்கள்.
பொதுவானாவை
வகைபல்வனேடேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCu3V2O7(OH)2·2H2O
இனங்காணல்
நிறம்ஆலிவ் பச்சை, மஞ்சள் பச்சை; பிரதிபலிக்கப்பட்ட ஒளியில் பச்சை முதல்மஞ்சள் பச்சை வரை
படிக இயல்புசெதில் படிகங்கள், உரோசெட்டு திரட்டுகள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புசரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை3 12
மிளிர்வுபளபளக்கும், மெழுகு, முத்து
கீற்றுவண்ணம்இளம் பச்சை
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
ஒப்படர்த்தி3.5 - 3.8
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+/-)
ஒளிவிலகல் எண்nα = 1.793 nβ = 1.801 nγ = 1.816
இரட்டை ஒளிவிலகல்δ = 0.023
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்
2V கோணம்அளக்கப்பட்டது: 63° to 83°
நிறப்பிரிகைஒளி கசியும்
புறவூதா ஒளிர்தல்ஒளிராது
கரைதிறன்அமிலங்களில் கரையும்
மேற்கோள்கள்[1][2][3]

தாங்கெய்ட்டு கனிமம் இதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனிமமாக உள்ளது. கால்சியோவோல்போர்தைட்டு (CaCuVO4(OH)) என்ற பெயராலும் தாங்கெய்ட்டு கனிமம் அறியப்படுகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் வோல்போர்தைட்டு கனிமத்தை Vbo[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது.

தோற்றம்

தொகு

உருசியாவின் பேர்ம்சுகயா மாகாணத்தில் உள்ள நகரத்தின் சோஃப்ரோனோவ்சுகி சுரங்கத்தில் வோல்போர்தைட்டு கனிமம் முதன்முதலில் 1837 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]

வனேடியம் உலோகத்தைக் கொண்டுள்ள நீர்வெப்ப மாறுபாட்டு தாமிர தாதுக்களில் ஓர் அசாதாரண ஆக்சிஜனேற்ற கனிமமாக இது தோன்றுகிறது. புரோசாண்டைட்டு, மாலகைட்டு, அடகாமைட்டு, டேன்செயிட்டு, கிரிசோகோலா, பாரைட்டு மற்றும் இயிப்சம் ஆகிய கனிமங்களுடன் கலந்து காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Mindat with location data
  3. Webmineral
  4. Mineral Galleries
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்போர்தைட்டு&oldid=4141868" இலிருந்து மீள்விக்கப்பட்டது