இந்து மெய்யியல்
இந்து மெய்யியல் பாரம்பரியமாக ஆறு ஆஸ்தீக சிந்தனைப் போதனைகளினால் (சமக்கிருதம்: आस्तिक "வைதீகம்")[1] அல்லது தரிசனங்களினால் ("நோக்கு") பிரிக்கப்பட்டுள்ளன. ஏனைய நான்கு நாஸ்தீகப் போதனைகளும் ("வைதீகமற்றது") வேதத்தின் மீது சார்ந்திப்பதில்லை. ஆஸ்தீகப் போதனைகள் ஆறும் பின்வருமாறு:
- சாங்கியம், கடவுள் நம்பிக்கையற்ற, இயற்கையிலும் சுய உணர்வு வேதாந்த விளக்கத்திலும் பலமான இருபொருள் வாதம்.
- யோகம், தியானம், சமாதிநிலை, தனிமை என்பவற்றின் போதனை
- நியாயம் அல்லது ஏரணம், அறிவின் மூலத்தைத் தேடல். நியாய சூத்திரங்கள்
- வைசேடிகம், அணுவியலின் புலனறிவாதப் போதனை
- மீமாம்சம், சீரான நடைமுறையின் துறவு எதிர்ப்பு மற்றும் இரகசிய எதிர்ப்புப் போதனை
- வேதாந்தம், வேதத்தினுடைய அறிவின் கடைசிப் பகுதி. இது தற்கால இந்து சமயத்தை ஆட்கொள்ள மத்திய காலத்திற்குப் பின்னான காலத்தில் வந்தது.
நான்கு நாஸ்தீகப் போதனைகள்:
ஆயினும், வித்யாரன்யா போன்ற மத்திய கால மெய்யியலாளர்கள் இந்திய மெய்யியலை சைவ, பாணினி, இரசேஸ்வரம் ஆகிய சிந்தனைகள் உட்பட்டவற்றுடனும் மூன்று தேவப் போதனைகளான அத்வைதம், விசிட்டாத்துவைதம், துவைதம் என்பவற்றுடனும் வெவ்வேறாக பதினாறு போதனைகளாகப் பிரிக்கின்றனர்.[2]
இந்து மத வரலாற்றில், ஆறு வைதீக போதனைகளின் வேறுபாட்டுகள் இந்து மதத்தின் "பொற்காலம்" எனப்பட்ட குப்தப் பேரரசு காலத்தில் இருந்தது. வைசேடிகம் மற்றும் மீமாம்சம் என்பனவற்றின் மறைவுடன், வேதாந்தத்தின் பலதரப்பட்ட உப போதனைகள் சமயமத்துக்குரிய மெய்யியலில் பிரதான பிரிவுகளாக ஆதிக்கத்துடன் எழுச்சியுற, மத்திய காலத்தின் பிற்பகுதியில் இது உபயோகமற்றதாக மாறியது. நியாய தத்துவம் 17 ஆம் நூற்றாண்டு வரை புதிய நியாய தத்துவமாக நிலவியபோது, சாங்கியம் தனியான போதனையாக இருக்கும் நிலையை படிப்படியாக இழந்தது, அதேவேளை இதன் கொள்கை யோகா, வேதாந்தம் என்பவற்றுள் உள்வாங்கப்பட்டது. சீக்கியமும்கூட இந்து சமயத்திலிருந்து வளர்ந்தது. ஏனென்றால் இவை இரண்டும் இந்திய துணைக்கண்டத்தில் உருவாக்கப்பட்டதுடன், சீக்கிய உருவாக்குனர்கள் இந்து சமயக் குடும்பங்களிலும், இந்தியாவில் பஞ்சாப் பகுதியின் இந்து சாதிகளிலும் பிறந்தனர். இவ்வாறு சீக்கியம் இந்து கலாச்சார, அரசியல் மூலத்தில் தோன்றியவாறு, சமணமும் பெளத்தமும் இதற்கு முன் உருவாகின.