ஷீலா கம்பட்கோன்

ஷீலா கேசவ் கம்பட்கோன் ( Konkani  ; 11 பிப்ரவரி 1932 - 5 செப்டம்பர் 2011) ஒரு குறிப்பிடத்தக்க கொங்கனி கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் இலக்கியவாதி ஆவார். இவரது அதிகாரப்பூர்வ பெயர் விஜயலட்சுமி கேசவ் கம்பட்கோன் (Konkani: विजयालक्ष्मि केशव कंबदकोणॆ).

ஷீலா கம்பட்கோன் , 11 ஜனவரி 1932 இல் மங்களூர் சித்ரபதி சரஸ்வதி பிராமண குடும்பத்தில் ராமாராவ் கத்ரே என்பவருக்கு மகளாகப் பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

கம்பட்கோன் மூன்று மாத வயதில் தாயை இழந்தார். இவரது அத்தை கில்பாடி சுந்தரிபாயிடம் அடைக்கலமாக இருந்தார். கில்பாடி, ஆசிரியை மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் 1948இல் மங்களூரில் எஸ்எஸ்எல்சி கல்வி பயின்றார். இவருடைய அத்தையால் இலக்கியத்தின் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இலக்கிய வாழ்க்கை தொகு

இவரது பள்ளி நாட்களிலிருந்து, பாடல்கள், கவிதைகள் எழுதினார். இவருடைய குழு நண்பர்கள் மற்றும் அயலவர்களுடன் இணைந்து பாடப்பட்டு படிக்கப்பட்டு இயற்றப்பட்டன. கல்லூரி பத்திரிகைக்கும் இவர் எழுதுவது வழக்கம். அனைத்திந்திய வானொலியின் மும்பை நிலையத்தில் கொங்கனி பிரிவில் இவர் சில கவிதைகளையும் எழுதியுள்ளார்.

இவர் 2010 ஆம் ஆண்டில், கிசோ பானு ஹசோ எனும் தொகுப்பினை எழுதியுள்ளார் ( Konkani: खिसॊ भोऱ्नु हासॊ).[1]

சான்றுகள் தொகு

  1. Khambadkone, Sheila (2010). Khiso Bhornu Haso (First ). Shop no. 12, Shiv Darshan Soc, Old MHB Colony, Gorai rd, Borivali west, Mumbai-400091: Yash Enterprises. 

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீலா_கம்பட்கோன்&oldid=3229633" இலிருந்து மீள்விக்கப்பட்டது