ஸாண்டுர் கணவாய்

ஸாண்டுர் கணவாய் (Shandur Top) உலகின் கூரை என அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தானில் உள்ள கிஸர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 12,200 அடி உயரத்தில் (3,700 மீட்டர்) அமைந்துள்ளது. இதன் இருபுறமும் கில்கிட் - பால்டிஸ்டான் மற்றும் சிட்ரால் நகரங்கள் அமைந்துள்ளன. ஸாண்டுர் கணவாய் சிட்ராலுக்கும் கில்கிட்-பால்டிஸ்டானுக்கும் இடையேயான முக்கியமான போக்குவரத்துப் பாதையாகும். இருபுறமும் வாழும் மக்கள் கோவார் மொழியில் பேசுகின்றனர்.

ஸாண்டுர் கணவாய்
ஏற்றம்12,200 அடி (3,719 மீ)
அமைவிடம்கீசர் , கில்கிட் - பால்டிஸ்டான்
ஆள்கூறுகள்36°09′54″N 72°45′29″E / 36.16500°N 72.75806°E / 36.16500; 72.75806ஆள்கூறுகள்: 36°09′54″N 72°45′29″E / 36.16500°N 72.75806°E / 36.16500; 72.75806
ஆப்கான் மலைக் கணவாய்கள்
ஸாண்டுர் ஏரி

ஸாண்டூர் போலோ திருவிழாதொகு

இங்கே உள்ள சமவெளிப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கில்கிட் - பால்டிஸ்டான் அணிக்கும் சிட்ரால் அணிக்கும் இடையே போலோ விளையாட்டு நடைபெறும். இங்கு 1936 ஆம் ஆண்டிலிருந்து போலோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.[1] உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வருவர். இப்போட்டியின் போது பாரம்பரிய இசையும் நடனங்களும் இடம்பெறுகின்றன.

தொடர்புடைய புத்தகங்கள்தொகு

  • The Gilgit Game by John Keay (1985) ISBN 0-19-577466-3
  • The Kafirs of the Hindukush (1896) Sir George Scott Robertson.
  • To the Frontier (1984) Geoffrey Moorehouse, pp. 267–270. Hodder and Stoughton Ltd., Reat Britain. Reprint: Sceptre edition 1988. ISBN 0-340-41725-0

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸாண்டுர்_கணவாய்&oldid=2698744" இருந்து மீள்விக்கப்பட்டது