ஸ்டீபன் அந்தோணி பிள்ளை
ஸ்டீபன் ஆண்டனி பிள்ளை (Stephen Antony Pillai) (பிறப்பு 22 சூன் 1952) தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர் ஆவார்.
ஆயர் ஸ்டீபன் ஆண்டனி பிள்ளை | |
---|---|
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் | |
உயர் மறைமாவட்டம் | மதுரை |
மறைமாவட்டம் | தூத்துக்குடி |
நியமனம் | 17 சனவரி 2019 |
பின்வந்தவர் | பதவியில் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 7 மே 1979 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 24 பெப்ரவரி 2019 யுவான் அம்புரோஸ்-ஆல் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 22 சூன் 1952 கன்னியாகுமரி தமிழ்நாடு இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
படித்த இடம் | அருள் ஆனந்தர் கல்லூரி |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குருப்பட்டமும்
தொகுகீழ மணக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். பாதிரியாராக மாற முயன்றார், 1969 இல் சென்னையின் சாந்தோம், செயின்ட் தாமஸ் மைனர் செமினரிக்குள் நுழைந்தார். [1] கருமாத்தூரில் அருள் ஆனந்தர் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், திருச்சியின் புனித குருத்துவக் கல்லூரியில் இறையியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 7 மே 1979 அன்று குருவாகத் திருநிலை பெற்று வேலூர் மறைமாவட்டத்தின் சேத்துப்பட்டு ஆலய உதவி குருவாக நியமிக்கப்பட்டார். [2]
ஆயராக நியமனம்
தொகுபோப் பிரான்சிஸ் ஆயர் யுவான் அம்புரோஸ் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, 17 சனவரி 2019 அன்று தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய ஆயரக மேதகு ஸ்டீபன் ஆந்தோணி அவர்களை நியமித்தார். [3] இவர் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயர் ஆவார். [4]
மேற்கோள்கள்
தொகு
- ↑ "Tuticorin gets new bishop - UCAN India". india.ucanews.com. Archived from the original on 2020-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-04-23.
- ↑ ICM, Team (17 January 2019). "Fr. Stephen Antony Pillai new Bishop of Tuticorin".
- ↑ "Appointments". www.apostolicnunciatureindia.com.
- ↑ தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி பிள்ளை வாழ்க்கை வரலாறு