ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் (நூல்)

ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் என்ற புத்தகம் ஆங்கிலப் புத்தகமான Stephen Hawking: His Life and Work என்பதன் தமிழ் மொழி பெயர்ப்பாகும். ஆங்கில மூலத்தை எழுதியவர் கிட்டி பெர்கூசன் (Kitty Ferguson) ஆவார். இதை ச. வின்சென்ட் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கையையும் அவரது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரைகளையும் கொண்டுள்ளது. எதிர் வெளியீடு பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

உள்ளடக்கம்தொகு

இந்நூல் மொத்தம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றைப் பற்றியக் கட்டுரைகளை உள்ளடக்கியது.

  • பகுதி- 1 (1942- 1975)
  • பகுதி- 2 (1970- 1990)
  • பகுதி- 3 (1990- 2000)
  • பகுதி- 4 (2000- 2011)

மொழிபெயர்ப்பாளர் குறிப்புதொகு

ஸ்டீபன் ஹாக்கிங்கை நோய் மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும் போது, அவரால் நடக்க முடியாது, தானே சாப்பிட முடியாது, கீழே சாயும் அவரது தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களால் தான் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹாக்கிங் அப்போதும் , இப்போதும் கூட செயலற்றவர் அல்ல. என்றும் செயல்படுகின்ற கணிதவியல் நிபுணர். இயற்பியல் அறிஞர். அப்போதே கூட அவரை ஐன்ஸ்டைனுக்கு அடுத்த ஆற்றல்மிக்க அறிவியலாளர் என்று அழைத்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லூக்காசியன் பேராசிரியர் பதவி மிக மதிப்பு வாய்ந்தது. 1663 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இப்பதவியில் இரண்டாவது பேராசிரியராக சர் ஐசக் நியூட்டன் இருந்திருக்கிறார்.

வெளியிணைப்புகள்தொகு