ஸ்டீவ் பக்னர்
ஸ்டீபன் அந்தோனி பக்னர் (பிறப்பு 31 மே 1946) ஜமேக்கா முன்னாள் பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் ஆவார்.
பக்னர் 1989 முதல் 2009 க்கு இடையில் 128 தேர்வு போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டு சாதனை படைத்தார், மேலும் இந்த காலகட்டத்தில் 181 ஒருநாள் போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டார். 1992 முதல் 2007 வரை தொடர்ந்து ஐந்து துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டார் "விளையாட்டுத் துறையில் சிறந்த சேவைகளுக்காக" இவருக்கு கமாண்டர் கிளாஸ என்ற விருது வழங்கப்பட்டது [1]
நடுவராக சாதனைகள்
தொகுகிரிக்கெட் உலகக் கோப்பை
தொகுபக்னர் ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் கள நடுவராக செயல்பட்டுள்ளார், ஐந்து இறுதிப் போட்டிகள் உட்பட 44 போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.[2]
தேர்வு போட்டிகள்
தொகுபக்னரின் சாதனையான 128 தேர்வு போட்டிகளில் நடுவராக செயல்பட்டதை 2019 திசம்பர் அலீம் தர் பாக்கித்தான் 129வது தேர்வு போட்டியில் நடுவராக செயல்பட்டு முறியடித்தார்.[3] 100 க்கும் மேற்பட்ட தேர்வு போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக செயல்பட்ட முதல் நடுவர்.[4]
விருதுகள்
தொகு100 ஒருநாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்டதற்காக ஐ.சி.சியின் வெண்கல பெயில்சு விருதும், 100 தேர்வு போட்டிகளில் நடுவராக செயல்பட்டு கோல்டன் பெயில்சு விருதையும் பக்னர் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bucknor Gets Order of Jamaica பரணிடப்பட்டது 7 சனவரி 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The greatest one-day knock of all". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.
- ↑ "Aleem Dar on brink of breaking world record". Cricket Pakistan. பார்க்கப்பட்ட நாள் 11 December 2019.
- ↑ "The greatest one-day knock of all". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019."The greatest one-day knock of all". ESPN Cricinfo. Retrieved 5 June 2019.