ஸ்டெப்பே கம்பளி யானை

ஸ்டெப்பே கம்பளி யானை
புதைப்படிவ காலம்:Mid Pleistocene
Skeleton
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. trogontherii
இருசொற் பெயரீடு
Mammuthus trogontherii
Pohlig, 1885 [1]
வேறு பெயர்கள்
  • Mammuthus armeniacus Falconer, 1857
  • Mammuthus sungari Zhou, M.Z, 1959
  • Mammuthus protomammonteus
  • M. trogontherii chosaricus

ஸ்டெப்பே கம்பளி யானை அல்லது ஸ்டெப்பே மாமூத் (Steppe mammoth) என்பது ஓர் அற்றுவிட்ட யானை இனம் ஆகும். இது எலிபன்டிடே குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவை மத்திய பெளெய்ஸ்டோசீன் காலத்தில் அதாவது 600,000 தொடக்கம் 370,000 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் யுரேசியாவின் பெரும்பாலாலும் வட பகுதிகள் முழுவதும் பரந்து வாழ்ந்து வந்தன. மாமூத்தஸ் மெரிடயோனெயில்சு எனும் மாமூத் இனத்தில் இருந்து சைபீரியாவில் ஸ்டெப்பே கம்பளி யானை இனம் பரிணாமம் அடைந்தது. இதுவே ஸ்டெப்பே மாமூத், துந்திரா யானை ஆகியவற்றின் பரிணாமத்தின் முதற்படி ஆகும்.

தோற்றம்

தொகு

மாமூத்தஸ் மெரிடயோனெயில்சு போன்று ஸ்டெப்பே மாமூத்களும் சிறிய மண்டையோட்டையும் சிறிய தாடையையும் கொண்டுள்ளன. ஆண் ஸ்டெப்பே கம்பளி யானைகளின் தந்தங்கள் வளைந்த தோற்றத்தைக் கொண்டதாக இருப்பதுடன் சராசரியாக 5.2 மீற்றர்கள் நீளத்தை உடையனவாகவும் அமைகின்றன. அத்துடன் பெண் யானைகள் சற்று மெலிந்ததும் சிறிது சாய்வானதுமான தந்தங்களைக் கொண்டுள்ளன. இவ்வகை யானைகளின் சராசரி உயரம் நான்கு மீற்றர்கள் ஆகும்.[2] அத்துடன் பொதுவாக இவற்றின் சராசரி எடை 24 தொன்கள் எடையில் காணப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Todd, N. E. (January 2010). "New Phylogenetic Analysis of the Family Elephantidae Based on Cranial-Dental Morphology". The Anatomical Record: Advances in Integrative Anatomy and Evolutionary Biology (Wiley-Liss, Inc.) 293 (1): 74–90. doi:10.1002/ar.21010. 
  2. Tikhonov, Alexei; Burlakov, Yuri (2008). "Causes of Northern Giants' Extinction". Science in Russia (Moscow: Nauka) (2): 48–53. பன்னாட்டுத் தர தொடர் எண்:0869-7078. இணையக் கணினி நூலக மையம்:28131825. http://dlib.eastview.com/browse/doc/16091691. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டெப்பே_கம்பளி_யானை&oldid=2915278" இலிருந்து மீள்விக்கப்பட்டது