ஸ்பைடர் (திரைப்படம்)

ஸ்பைடர் (Spyder) இயக்குநர் ஏர். ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரிலையன்சு, லைக்கா நிறுவன தயாரிப்பில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் செப்டம்பர் 2017இல் வெளியான இரு மொழித் திரைப்படம். இதில் மகேஷ் பாபு, பரத், எஸ் ஜே சூர்யா, நதியா, ஆர் ஜெ பாலாஜி மற்றும் பலர் நடித்துளளனர். மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், சிறீகர் பிரசாத் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படம் செப்டம்பர் 27, 2017 இல் வெளியானது.

ஸ்பைடர்
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புஎன்.வி. பிரசாத்
தாகூர் மது[1]
கதைஏ. ஆர். முருகதாஸ்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புமகேஷ் பாபு
பரத்
இராகுல் பிரீத் சிங்
எஸ். ஜே. சூர்யா
நதியா
ஆர். ஜே. பாலாஜி
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புசிறிகர் பிரசாத்
கலையகம்என் வி ஆர் சினிமா
விநியோகம்ரிலையன்சு
லைக்கா தயாரிப்பகம்
வெளியீடுசெப்டம்பர் 27, 2017 (2017-09-27)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

எஸ். ஜே. சூர்யா மகேஷ் பாபுவிற்கு எதிராளியாக தேர்வுசெய்யப்பட்டார். ஏற்கனவே எஸ். ஜே. சூர்யா இயக்கிய நியூ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான நானியில் நாயகனாக மகேஷ்பாபு பணியாற்றியுள்ளார். ஏ. ஆர். முருகதாஸ், எஸ். ஜே. சூர்யாவின் வாலி, குஷி திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். திரைப்படத்தின் நாயகியாக பிரனிதி சோப்ரா முதலில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் படப்பிடிப்பிற்குத் தேவையான நாட்கள் அவரால் ஒதுக்கமுடியாததால் இராகுல் பிரீத் சிங்கை தேர்ந்தெடுத்தனர். திரைப்படத்தின் வில்லனாக பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர். முருகதாசின் முந்தைய திரைப்படமான கத்தியின் போது அவரின் விருப்ப இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பிற திரைப்படங்களின் பணியாற்றி வந்ததால் இப்போது மீண்டும் இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது.

படப்பிடிப்புதொகு

படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகள் 2016ம் ஆண்டு சூலை மாதம் துவங்கியது. இறுதியில் படப்பிடிப்பை இரண்டு கட்டமாக நடத்தலாம் என திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக குசராத் மாநிலத்தில் பல்வேறு காட்சிகள் நவம்பர் மாதம் படமாக்கப்பட்டது. 2017ம் ஆண்டு படத்தில் 80 விழுக்காடு படப்பிடிப்புகள் நிறைவடந்தது. படத்தில் பெரும்பாலான சண்டைக்காட்சிகளில் தானே நடித்தார் மகேஷ் பாபு[2]. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் 2017ம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் துவங்கியது[3]. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இன்னும் இரு பாடல் காட்சிகள் மட்டும் எஞ்சியுள்ளன என 2017ம் ஆண்டு சூன் மாதம் படப்பிடிப்புக் குழு தெரிவித்தனர்[4].

இசைதொகு

ஸ்பைடர்
இசை
ஒலிப்பதிவு2017
இசைப் பாணிமுழுநீளப் படத்தின் இசை
மொழிதமிழ், தெலுங்கு
இசைத்தட்டு நிறுவனம்ஜீ இசை நிறுவனம்
இசைத் தயாரிப்பாளர்ஹாரிஸ் ஜயராஜ்
ஹாரிஸ் ஜயராஜ் chronology
'வனமகன்
(2017)
ஸ்பைடர் 'துருவ நட்சத்திரம்
(2017)

ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் தெலுங்கில் 7 ஆண்டு இடைவெளிக்குப் பின் இசையமைத்த இத்திரைப்படத்தில் இயக்குநர் ஏ. ஆர். முருகதாசுடன் 4வது முறையாகவும் மகேஷ் பாபுவுடன் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் இரண்டாவது திரைப்படம். இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள். ஜீ இசை நிறுவனத்தின் மூலம் 2017ம் ஆண்டு ஆக. 2ம் நாள் படத்தின் பூம் பூம் எனும் பாடல் வெளியிடப்பட்டது. 2017ம் ஆண்டு செப். 9ம் நாள் சென்னை கலைவாணர் அரங்கில் பாடல்கள் வெளியிடப்பட்டது.

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் மதன் கார்க்கி

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "பூம் பூம்"  நிகிதா காந்தி 04:15
2. "சிசிலியா சிசிலியா"  ஹரிசரண், சக்திசிறீ கோபாலம் 04:43
3. "ஆலி ஆலி"  பிரிஜேஷ் திரிபாதி சாண்டில்யா, ஹரிணி, சுனிதா 05:31
4. "ஒற்றை இரவுக்காய்"  பிரவின் சாய்வி, கிரிஸ்டோபர் ஸ்டான்லி, சத்திய பிரகாஷ் 02:57
5. "ஸ்பைடர் ஆன் மிசன்"  ஹாரிஸ் ஜெயராஜ் 01:14
மொத்த நீளம்:
18:54

வெளியீடுதொகு

திரைப்படம் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் நாள் வெளியிடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது[5][6][7]. பாகுபலிக்கு அடுத்தாற்போல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளில் ஒரே நாளில் வெயிடப்படுகிறது[8]. தமிழகத்தில் வெளியீடு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது[9]. சாட்டிலைட் உரிமத்தை சன் டி.வி வாங்கியது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பைடர்_(திரைப்படம்)&oldid=3304619" இருந்து மீள்விக்கப்பட்டது