ஸ்ரீ ராமானுஜர் (திரைப்படம்)

ஸ்ரீ ராமானுஜர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்திலும் மீனாட்சி நாராயணனின் ஒளிப்பதிவிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கு சுப்பிரமணியம், ந. ராமரத்னம் போன்ற பத்திரைக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் நடித்து அவர்களின் கூட்டு முயற்சியால் வெளியானது ஆகும். இப்படத்துக்கு உரையாடலை வ. ராமசாமி எழுத, பாடல்களை பாரதிதாசன் எழுதினார்.

ஸ்ரீ ராமானுஜர்
இயக்கம்ஏ. நாராயணன்
தயாரிப்புஎஸ். எஸ். பிலிம்ஸ்
சீனிவாஸ் சினிடோன்
சீதாலக்ஸ்மி
கதைவ. ராமசாமி
நடிப்புசங்கு சுப்பிரமணியம்
என். ராமரத்னம்
சீனிவாச வரதன்
ந. பிச்ச மூர்த்தி
என். சீதாலக்ஸ்மி
ஆர். கமலாம்பாள்
ஜி. ஏ. ஞானாம்பாள்
ஒளிப்பதிவுவேலப்பன்
படத்தொகுப்புஎன். கே. கோபால்
வெளியீடு1938
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படம் வெளிவந்த பிறகு கதைப்போக்கு உரையாடல் போன்றவை நன்றாக இருக்கின்றன ஆனால் இதில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களின் நடிப்புப்பற்றி கல்கி போன்ற எழுத்தாளர்களால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது.[1]

கதைச் சுருக்கம்

தொகு

இராமானுசர் மைசூர் நாட்டுக்குச் செல்கிறார். அந்நாட்டு மன்னனான விட்டுணுவர்தனனைக் கொண்டு திருநாராயணபுரத்தில் ஒரு பெரிய விஷ்ணு கோயிலை கட்டுவிக்கிறார். திருநாராயணபுரத்தில் இருக்கும் தீண்டப்படாத மக்களை திருக்குலத்தார் என பெயர்கொடுத்து அவர்களை கோயில் நுழைவு செய்விக்கிறார்.

நடிகர்கள்

தொகு
  • சங்கு சுப்பிரமணியம்
  • ந. ராமரத்தினம்
  • ஆர் சீனிவாச வரதன்
  • ந. பிச்சமூர்த்தி
  • வி. எஸ். கிரிஷ்ணமூர்த்தி
  • ஆர். சுந்தர்ராஜன்
  • நித்யானந்தம் அடிகள்
  • எஸ். தியாகராஜ சிவம்
  • எஸ். சீதாலட்சுமி
  • ஆர். கமலாம்பாள்
  • ஜி. ஏ. ஞானாம்பாள்
  • டி. எஸ். கிருஷ்ணவேணி
  • டி. கே. சகுந்தலா

மேற்கோள்கள்

தொகு
  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 13 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள். அறிஞர் வ.ரா.". தினமணிக் கதிர்: 14-15.