ஹதீசா அல்லது ஹதீதா (Classical Syriac: ܚܕܬܐஹதசா, அரபு மொழி: الحديثةஅல்-ஹதீசா) என்பது மேல் சாபுடன் சேருமிடத்துக்குச் சற்று முந்தி திஜ்லா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்திருந்த ஒரு வரலாற்று நகரமாகும். இந்நகரம் சாசானியர் ஆட்சியின் போதும் இசுலாமிய ஆட்சியின் தொடக்க காலத்திலும் சிறந்து விளங்கியது.

வரலாறு தொகு

இந்நகர் சாசானியரால் கட்டியெழுப்பப்பட்டது என்து தெளிவு. அதனாற்றான், இதன் பாரசீக மொழிப் பெயரான புதுநகர் ("புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது" என்பது) இதன் சிரிய மொழி, அறபு மொழிப் பெயர்களுடன் ஒத்துப் போகிறது.[1] அல்-பலாதுரியின் படி, மத்திய மெசோப்பொத்தாமியாவின் பிரூசு சாப்பூர் நகரவாசிகள் தமக்கா இவ்விடத்தில் புதிதாகக் கட்டியெழுப்பப்பட்ட நகரில் குடியேறியதுடன் இப்பெயரையும் கொண்டு வந்ததாலேயே இந்நகருக்கு இப்பெயர் ஏற்பட்டது.[2] இந்நகர் அதியாபினி மறை மாகாணத்தினுள் கிழக்கத்தியத் திருச்சபையின் மேற்றிராணியாரின் வதிவிடமாகப் புகழ் பெற்றது. அங்கு குறிப்பிடத் தக்க எண்ணிக்கையான யூதர்களும் வசித்தனர். அவர்களில் பலர் ஆறாம் நூற்றாண்டில் ஹதீசாவின் தித்துசு மேற்றிராணியிடம் கிறித்தவத்தைத் தழுவிக் கொண்டனர்.[3]

அப்பாசியர் ஆட்சிக்காலத்தின் போது இந்நகர் மிக்க வளப்படுத்தவும் விரிவாக்கவும் பட்டது. நான்காம் கலீபா அல்-ஹாதி தனது இறப்புக்கு முன்னர் இதனை அப்பாசிய கலீபகத்தின் தலை நகராக்கினார். சாமர்ரா ஆட்சிக் குழப்பத்தின் போது அப்பாசியப் படைத் தளபதி மூசா இப்னு புகா இதனைத் தன் தலைமையகமாகக் கொண்டார்.[2] நகரின் சனத்தொகை பெரும்பாலும் கிழக்கத்திய திருச்சபைக்குரிய கிறித்தவர்களாகவே இருந்தனர். மார்காவின் ஆபிறகாம் போன்ற ஹதீசாவின் மேற்றிராணிமார் சிலர் கிழக்கின் கத்தோலிக்கோ பதவி வரையும் உயர்ந்தனர். மர்வின் யெசூதாது போன்ற வேறு சிலர் முக்கிய மறைநூல்களை எழுதினர்.

13 ஆம் நூற்றாண்டில் நிகழந்த மொங்கோலிய ஆக்கிமிப்பின் பின்னர் ஹதீசாவின் முக்கியத்துவம் குறைந்ததுடன், கைவிடப்பட்டு, அழிவுற்றது.[2]

மேலும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹதீசா&oldid=3644120" இலிருந்து மீள்விக்கப்பட்டது