ஹரிஷ்-சந்திரா

ஹரிஷ்-சந்திரா FRS (11 அக்டோபர் 1923 - அக்டோபர் 16, 1983) ஒரு இந்திய அமெரிக்க கணிதவியலாளர் மற்றும் இயற்பியலாளராக இருந்தார். இவர் representation theory, மற்றும்   harmonic analysis on semisimple Lie groups. என்ற தலைப்புகளில் பங்காற்றியுள்ளாா்.[3][4][5]

Harish chandra
பிறப்பு அக்டோபர் 11, 1923(1923-10-11)
கான்பூர், இந்தியா
இறப்பு16 அக்டோபர் 1983(1983-10-16) (அகவை 60)
Princeton, New Jersey, அமெரிக்க ஐக்கிய நாடு
வதிவுPrinceton, New Jersey
குடியுரிமைஅமெரிக்க ஐக்கிய நாடு[1]
துறைகணிதம், இயற்பியல்
Alma materஅலகாபாத் பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்பால் டிராக்
அறியப்பட்டதுHarish-Chandra's c-function
Harish-Chandra's character formula
Harish-Chandra homomorphism
Harish-Chandra isomorphism
Harish-Chandra module
Harish-Chandra's regularity theorem
Harish-Chandra's Schwartz space
Harish-Chandra transform
Harish-Chandra's Ξ function
பரிசுகள்Fellow of the Royal Society[2]
Cole Prize in Algebra (1954)
Srinivasa Ramanujan Medal

இளமைக் காலம்தொகு

ஹரிஷ்-சந்திரா பிரிட்டிஷ் இந்தியாவிலன், கான்பூரில் பிறந்தாா். அவா் கான்புாிலுள்ள பி.என்.எஸ்.டி. கல்லுாாி மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றாா். 1943 இல் இயற்பியல் பட்டப்படிப்பைப் பெற்றபின், அவர் பெங்களூரிலுள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் இல் மேற்படிப்பிற்காகச் சென்றார். மேலும் ஹோமி ஜே பாபாவுடன் பணியாற்றினார்.

1945 இல், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், பால் டிராக்கின் கீழ் ஒரு ஆராய்ச்சி மாணவராக பணியாற்றினார். கேம்பிரிட்ஜில் இருந்தபோது, அவர் வொல்ப்காங் பாலியின் விாிவுரைகளில் கலந்து கொண்டார், அவர்களில் ஒருவர் பவுலின் வேலைகளில் தவறு செய்ததை சுட்டிக்காட்டினார். இருவரும் வாழ்நாள் நண்பர்களாக மாறிவிட்டனர். இந்த நேரத்தில் அவர் கணிதத்தில் அதிக ஆர்வம் காட்டினார். கேம்பிரிட்ஜ் அவர் 1947 இல் தனது PhD பட்டத்தைப் பெற்றார்.

1947/48 இல் பிரின்ஸ்டன், அமொிக்காவின் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடிக்கு விஜயம் செய்தபோது, ஹரிஷ்-சந்திராவை தனது உதவியாளராக அழைத்து வந்தாா். இந்த கட்டத்தில் ஹரீஷ்-சந்திர இயற்பியலில் இருந்து கணிதத்திற்கு மாற முடிவு செய்தார். அவர் 1963 ஆம் ஆண்டு முதல் பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி, இன்ஸ்டிடியூட் ஃபார் முதுநிலை ஆய்வு நிறுவனத்தில் ஒரு ஆசிரிய உறுப்பினராக இருந்தார். 1968 ஆம் ஆண்டு முதல் 1983 வரை அவரது இறப்பு வரை அவர் IBM வான் நியூமன் பேராசிரியராக இருந்தார். . 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், அட்மண்ட் போரெலின் 60 வது பிறந்த நாளை நினைவாக பிரின்ஸ்டனில் மாநாட்டின் போது மாரடைப்பால் இறந்தார். அடுத்த வருடம் திட்டமிடப்பட்ட அவரது 60 வது பிறந்தநாளுக்கு இதேபோன்ற மாநாடு ஒரு நினைவு மாநாட்டாக மாறியது. அவர் தனது மனைவி லலிதா (லில்லி) மற்றும் அவரது மகள் பிரேமலா (பிரேமி) மற்றும் தேவகி ஆகியோா் இன்றும் வாழ்கிறாா்கள்.

விருதுகள்தொகு

அவர், அமொிக்காவின் National Academy of Sciences இல் உறுப்பினராக உள்ளாா். மற்றும் ராயல் சொசைட்டியின் ஒரு பேராசிரியராகவும் இருந்தார். அவர் 1954 இல் American Mathematical Society இன் கோல் பரிசு பெற்றவர். The Indian National Science Academy 1974 இல் ஸ்ரீனிவாச ராமானுஜன் பதக்கம் அளித்து கவுரவித்தது. 1981 இல் அவர் யேல் பல்கலைக்கழகத்தின் கவுரவ பட்டம் பெற்றார்.

கான்புாிலுள்ள வி.எஸ்.எஸ்.டி. கல்லுாியின் கணிதவியல் துறை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வடிவங்களில் இவரது பிறந்தநாளை கொண்டாடுகிறது, இதில் பல்வேறு கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் ஹரிஷ்-சந்திரா ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடமிருந்து விரிவுரைகள் உள்ளன.

இந்திய அரசு, ஹரிஷ்-சந்திரா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஐ, Theoretical Physics and Mathematics க்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக அறிவித்துள்ளது.

ஹரிஷ்-சந்திராவின் வாழ்க்கை வரலாற்றை ராபர்ட் லாங்லண்ட்ஸ் எழுதினார்:

மேற்கோள் நுால்கள்தொகு

  1. A Biographical Memoir
  2. Langlands, Robert P. (1985). "Harish-Chandra. 11 October 1923-16 October 1983". Biographical Memoirs of Fellows of the Royal Society 31: 198–193. doi:10.1098/rsbm.1985.0008. 
  3. ஹரிஷ்-சந்திரா at the Mathematics Genealogy Project
  4. O'Connor, John J.; Robertson, Edmund F., "ஹரிஷ்-சந்திரா", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  5. Varadarajan, V. S. (1984). "Harish-Chandra (1923–1983)". The Mathematical Intelligencer 6 (3): 9–5. doi:10.1007/BF03024122. 

படைப்புகள்தொகு

நுாற்பட்டியல்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஷ்-சந்திரா&oldid=2437533" இருந்து மீள்விக்கப்பட்டது