ஹர ஹூண நாடு


ஹர ஹூண நாடு (Hara-Huna Kingdom) மகாபாரத காவியம் குறிப்பிடும் பரத கண்டத்திற்கு வெளியே, வடக்கில் இமயமலை நாடுகளில் ஒன்றாகும். காஷ்மீர நாட்டிற்கு கிழக்கே, சீனாவின் சிஞ்சியாங் பிரதேசத்தில், இமயமலையில் ஹர ஹூணர்கள் எனும் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி இன மக்களின் நாடாகும். இவர்களில் ஒரு பிரிவினர் பண்டைய இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் குடிபெயர்ந்தனர்.

தருமராசாவின் இராசசூய வேள்விக்கான நிதியை திரட்டுவதற்காக, படையெடுத்து, பரத கண்டத்தின் மேற்குப் பகுதி நாடுகளை வெல்வதற்காக, நகுலன் செல்லும் போது, ஹர ஹூணர்களையும் வென்று திறை வசூலித்தான்.

மகாபாரதக் குறிப்புகள்

தொகு

நகுலனின் படையெடுப்புகள்

தொகு

மேற்கு இந்தியப் பகுதிகளில் உள்ள நாடுகளை வென்று, தருமனின் இராசசூய வேள்விக்கான நிதி திரட்டுகையில், நகுலன், சிந்து ஆறு கடலில் கலக்கும் பகுதிகளில் இருந்த சூத்திரர்கள், ஆபிரர்களையும், பஞ்சாப் பகுதியில் இருந்த ஹர ஹூணர்களையும் வென்று திறை திரட்டியதாக மகாபாரதத்தின் சபா பருவம், அத்தியாயம் 31-இல் கூறப்பட்டுள்ளது.

தருமரின் இராச்சூய வேள்வியில் ஹர ஹூணர்கள்

தொகு

இந்திரப்பிரஸ்தத்தில், தருமர் நடத்திய இராசசூய வேள்வியில் கலந்து கொண்டு, தருமருக்கு பரிசளித்த நாட்டு மன்னர்களில் பட்டியலில், ஹர ஹூண நாட்டு மன்னருடன், யாதவர்கள், மிலேச்சர்கள், யவனர்கள், சீனர்கள், சிதியர்கள், சகர்கள், கேயர்கள், காஷ்மீரர்கள், இமாவான்கள், நேபாளிகள் அடங்குவர். [1]


இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. துரியோதனன் விவரித்த காணிக்கைப் பட்டியல் - சபாபர்வம் பகுதி 50


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர_ஹூண_நாடு&oldid=2282344" இலிருந்து மீள்விக்கப்பட்டது