ஹூணர்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

ஹூணர்கள் (Hunas) (கி பி 475–576) நடு ஆசியாவைச் சேர்ந்த ஹெப்தலைட்டுகள் எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நாடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு நுழைந்து, குப்தப் பேரரசையும், மத்திய இந்தியாவின் சந்தேல குல மன்னர் யசோதர்மன் மீது அடிக்கடி தாக்குதல்கள் தொடுத்து காஷ்மீர் முதல் மாளவம் வரையிலான பகுதிகளை கி பி 475 முதல் 576 முடிய ஆண்டனர்.[1][2]

ஹூண குல லகானாவின் மன்னர் உதயணா காலத்திய நாணயம்
ஹூண மன்னன் நாப்கி மல்கா
காந்தார/காபூலின் ஹூண மன்னர் நாப்கி மல்கா 475–576)
விஷ்ணுவை வணங்கும் சிவன், ஹூணர் காலத்திய சிற்பம். பிரிட்டன் அருங்காட்சியகம்

வெள்ளை ஹூண மன்னர்களில் புகழ் பெற்றவர்கள் அட்டிலா, தோரமணன் மற்றும் மிகிரகுலனும் ஆவர்.

வரலாறு

தொகு
 
கி பி 500-இல் ஹூணர்களின் ஆதிக்கத்தை காட்டும் ஆசியாவின் வரை படம், கி பி 500

இந்தியா மீது படையெடுத்து வந்த ஹெப்தலைட்டுகளின் ஒரு கூட்டத்தவரான வெள்ளை ஹூணர்களை குப்தப் பேரரசர் ஸ்கந்த குப்தர் வென்றார்.[3] கி பி 510-இல் குப்த பேரரசர் பானுகுப்தர் காலத்தில் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்களை வென்றார்.[4][5]

கி பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்த ஹூணர்களை புந்தேல்கண்ட் பகுதியின் சந்தேல குல மன்னர் யசோதர்மனும், நரசிம்மகுப்தரும் விரட்டியடித்தனர்.[6][7]

பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், ஹூணர்கள் மீண்டும் படையெடுத்து இந்தியாவின் மேற்கு, வடக்கு, மற்றும் மத்தியப் பகுதிகளைக் கைப்பற்றினர்.[4][5]

 
யசோதர்மனின் வெற்றித் தூண், சோந்தனி, மண்டோசோர்

திபெத்திய மொழிகளில் ஹூணர்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. ஹூணர்கள் யவனர்கள், காம்போஜர்கள் போன்றவர்களே எனக் குறித்துள்ளனர்.[8]

ஹூனர்கள் சசானியப் பேரரசர்கள் போன்று நாணயங்களை வெளியிட்டனர். [9]

சமயம்

தொகு

ஹூணர்கள் வேத கால சூரியக் கடவுளையும் சிவனையும் வழிபட்டனர்.[10]

இராஜபுத்திர குலங்கள்

தொகு

ஹூணர்களுக்கும் உள்நாட்டு மக்களுக்கும் பிறந்தவர்களே சூரிய, அக்னி வம்சத்தைச் சார்ந்த 36 இராஜபுத்திர குலங்கள் என நம்பப்படுகிறது.[11][12]

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. India: A History by John Keay p.158
  2. Kurbanov, Aydogdy (2010). "The Hephthalites: Archaeological and Historical Analysis" (PDF). p. 24. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013. The Hūnas controlled an area that extended from Malwa in central India to Kashmir.
  3. Ancient India: History and Culture by Balkrishna Govind Gokhale, p.69
  4. 4.0 4.1 Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen, p.220
  5. 5.0 5.1 Encyclopaedia of Indian Events and Dates by S. B. Bhattacherje, p.A15
  6. India: A History by John Keay, p.158
  7. History of India, in Nine Volumes: Vol. II by Vincent A. Smith, p.290
  8. Pag-Sam-Jon-Zang (1908), I.9, Sarat Chandra Das; Ancient Kamboja, 1971, p 66, H. W. Bailey.
  9. Source
  10. History of civilizations of Central Asia, Volume 3 By Boris Abramovich Litvinovskiĭ Page 173
  11. http://www.kiplingsociety.co.uk/rg_marque_royalraces.htm
  12. Rajput Indian history

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூணர்கள்&oldid=4058701" இலிருந்து மீள்விக்கப்பட்டது