ஹூண இராச்சியம்

ஹூண மக்கள் (Hunas) இமயமலையை ஒட்டிய திபெத் மற்றும் சீனப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் ஆவார். ஹூண இராச்சியம், தற்கால சீனாவின் மேற்கில் உள்ள சிஞ்சியாங் மாகாணப் பகுதிகளைக் கொண்டிருந்தது. ஹூணர்கள் பரத கண்டத்துடன் அதிகம் தொடர்பில்லாதவர்கள். மகாபாரதம் இதிகாசத்தில் ஹூணர்களை அடிக்கடி குடியிருப்புகளை மாற்றிக் கொண்டே இருக்கும் நாடோடி மக்கள் எனக்குறிப்பிடுகிறது.

மகாபாரத்தில் ஹூண இராச்சியம் தொகு

பரத கண்டத்தின் வடக்கில் வாழ்ந்த இனக்குழுவினரான ஹூணர்கள், யவனர்கள், மிலேச்சர்கள், குரூரர்கள், சீனர்கள், காம்போஜர்கள் குறித்த மகாபாரதம் இதிகாசத்தின் பீஷ்ம பருவம் அத்தியாயம் 9:4-இல் பேசப்படுகிறது.[1]வரலாற்றாளர் வி. ஏ. ஸ்மித் கூற்றின் படி, ஹுண மக்கள் பாரசீகத்தின் சாசானியப் பேரரசு ஆட்சியில் முதன் முதலாக அறியப்படுகிறார்கள். சாசானியப் பேரரசு

ஹூண மக்களின் பிறப்பின் புராணக் கதைகள் தொகு

வசிட்டரின் தெய்வீக பசு மாட்டை விசுவாமித்திரர் படைகள் தாக்கிக் கைப்பற்ற முயன்ற போது, பசுவின் உடலிலிருந்து தோன்றிய வீரர்கள் விஸ்வாமித்திரரின் படைகளை அழித்தது. இந்த பசுவிலிருந்து தோன்றிய வீரர்களே ஹூண மக்கள் என மகாபாரதம் கூறுகிறது.

பரத கண்டத்திற்கு வெளியே இருந்த ஹூண மக்களுடன், சிதியர்கள், யவனர்கள், சவரர்கள், புண்டரர்கள், கிராதர்கள், கசர்கள் போன்ற இனக்குழுக்களை மகாபாரதத்தின் ஆதி பருவம் அத்தியாயம் 1:177-இல் விவரிக்கிறது.

குருச்சேத்திரப் போரில் ஹூணர்கள் தொகு

ஹூண, நிசாத, பிசாச, லடாக்கியர்கள், உத்தரர்கள், சரவர்கள் மற்றும் வத்ச நாட்டு வீரர்கள் புடைசூழ குருச்சேத்திரப் போரின் இரண்டாம் நாளில் தருமன் கலந்து கொண்டதாக மகாபாரதம் கூறுகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Mahabharata Bhishma Parva Chapter 9:4

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூண_இராச்சியம்&oldid=3802770" இலிருந்து மீள்விக்கப்பட்டது