எச். ஜி. வெல்ஸ்

(ஹெச். ஜி. வெல்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹெச். ஜி. வெல்ஸ் அல்லது எச். ஜி. வெல்சு (H. G. Wells, செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஒரு ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும் இவர் தனது அறிபுனை படைப்புகளாலேயே அறியப்படுகிறார். வெல்ஸ் அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ழூல் வேர்ண்).

ஹெச். ஜி. வெல்ஸ்
1920க்கு முன் வெல்ஸ்
1920க்கு முன் வெல்ஸ்
பிறப்புஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ்
(1866-09-21)21 செப்டம்பர் 1866
புரோம்லே, ஐக்கிய இராச்சியம்
இறப்பு13 ஆகத்து 1946(1946-08-13) (அகவை 79)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
தொழில்எழுத்தாளர், ஆசிரியர், வரலாற்றாளர், இதழாளர்
தேசியம்பிரித்தானியர்
வகைஅறிபுனை (சமூக அறிபுனை)
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி டைம் மெஷீன், தி இன்விசிபிள் மேன், தி ஐலாண்ட் ஆஃப் டாக்டர் மோரோ, தி வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ், தி ஃபர்ஸ்ட் மென் ஆன் தி மூன், தி ஷேப் ஆஃப் திங்ஸ் டூ கம்

வெல்ஸ் ஒரு சமதர்மவாதி. பொதுவாக அவர் அமைதிவாதத்தை ஆதரித்தாலும் முதலாம் உலகப் போர் துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிற்காலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ், நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடையவற்றைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன. இவர் பல புதினங்களை எழுதியுள்ளார் அதில் தி டைம் மெஷீன் என்ற புதினம் கால பயணத்தில் சென்று வருவது பற்றி எழுதப்பட்டு இருக்கும் இவருடைய இந்த புதினம் அறிவியல் விந்தையாக அவரது காலத்தில் இருந்து பல ஆண்டுகள் கழித்து வந்த பலரும் வியக்கும் விதத்தில் காலப் பயணம் குறித்து எழுதினர். அவருடைய இந்த புதினம் பல தொலைக்காட்சி தொடர்கள் ,திரைப்படங்களுக்கு மூலமாக அமைந்து இருந்தது .பல வரிபட கதைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது இதை 1895 வெளியிட்டார் .இந்த கதையின் கதாநாயகன் தனது நிகழ்காலத்தில் இருந்து கடந்தகாலத்தில் சென்றுவிடுவார். சோவியத் யூனியன் தலைமை பொறுப்பை எற்றவுடன் சோவியத் யூனியன் குறித்த இவருடைய கருத்து மாறியது 1934 ஆம் ஆண்டு இவர் ஜோசப் ஸ்டாலின் அவர்களை ஜூலை 23ஆம் தேதி சந்தித்து ஒரு நேர்காணல் நடத்தினார் .அந்த பேச்சுவார்த்தை மாலை 4:00 மணி முதல் 6:50 வரை நடை பெற்றது [1] இந்த நேர்காணலின் பொழுது அவர்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலில் மனிதர்கள் மூளையை மாற்றி அமைக்க ஒரு ஐந்து ஆண்டு திட்டம் அமைக்கலாம் என்றும் அதன் மூலம் மேம்பட்ட மனிதகுலம் அமையும் என்று ஸ்டாலினிடம் கூறினார்.

ஓவியர்

தொகு

இவருக்கு ஓவியத்தின் மீது நாட்டம் இருந்தது. தனக்கு உரிய பாணியில் மிக சுவாரசியமாகவும் சிறப்பாகவும் தன்னை வெளிக்காட்டி கொள்ள அவருக்கு இந்த ஓவியங்களும் வரைபடங்களும் உதவியாக இருந்தன .அவர் இந்த ஓவியங்களை வரைவதற்கு தனியாக காகிதங்களை வைத்து இருக்கவில்லை தன்னுடைய நாட்குறிப்பின் முகப்பு பக்கத்திலும் உட்பக்கங்களின் கடைசிப் பகுதிகளிலும் பெரும்பாலும் இவற்றை தீட்டினார் .அந்த வரைபடங்கள் பலவகைப்பட்டதாக இருந்தன அரசியல் விமர்சனங்களில் இருந்து தனது விருப்பங்கள் வரை பலவற்றை உள்ளடக்கியவாறு இருந்தது. அவருடைய திருமணத்திற்கு பிறகு அவருடைய மணவாழ்கை பற்றி பல சித்திரங்களை வரைந்தார். அதில் அவருடைய மனைவி அமி காதேரினே பற்றியது ஆகும் அவரை இவர் செல்லமாக ஜேன் என்று அழைப்பார் .இந்த காலகட்டத்தில் இவருடைய படங்களும் ஓவியங்களும் பிச்ஷுவாஸ் என்று அழைக்கப் பட்டன.

முதலாம் உலகப் போர்

தொகு

முதலாம் உலகப் போர் தீவிரம் அடைந்து கொண்டு இருந்த நிலையில் இவர் பிரித்தானியா அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார் இவர் பல முறை பிரித்தானியா அரசை எதிர்த்தும் அதன் கொள்கைகளை விமர்சித்தாலும் 1916ஆம் ஆண்டு போர் விரைவாக முடிந்து அமைதி திரும்ப வேண்டும் என்று எண்ணினார்

யுஜெநீக்ஸ் (EUGENICS)

தொகு

இவர் மனிதகுலம் நலமாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்று பேராவல் கொண்டார் ஆகையால் யுஜெநீக்ஸ் மூலம் மரபணுவின் தரத்தை மேம்படுத்தி சிறந்த மனித குலம் உருவாக வேண்டும் என்னும் கொள்கை கொண்ட இந்த யுஜெநீக்ஸ் இவர் ஆதரித்தார்

மதம்

தொகு

வெல்ஸ் பல புத்தகங்களை எழுதி உள்ளார் அவற்றில் கடவுள் கண்ணுக்கு தெரியாத அரசன் (GOD THE INVISIBLE KING) குறிப்பிடத்தக்கது. 1917 ஆண்டு இந்த புத்தகத்தை எழுதினர் அதில் இவருக்கு கடவுள் பற்றி எப்படி தெரியும் என்ற கேள்விக்கும் .எந்த கடவுளை பின்பற்றி இந்த புத்தகத்தை எழுதினர் என்று பல கேள்விகள் இதை படித்தவர்களுக்கு எழுந்தது .அதற்கு அவர் அளித்த பதில் இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஒரு கடவுளையும் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை எனது கடவுள் பற்றிய யோசனை என்று கூறினார் .இந்த புத்தகத்தில் தெளிவாகவும் ஆணித் தனமாகவும் அதன் ஆசிரியர் மதத்தை குறித்து கருத்து தெளிவாக விளங்குகிறது .மேலும் தனிப்பட்ட மற்றும் ஆத்மார்த்தமான கடவுள் பற்றிய கருத்தையும் வெளிப்படுத்தி உள்ளார் .

ஆசிரியர் பணி

தொகு

1879 ஆம் ஆண்டு வெல்ஸின் தாயார் அவரது உறவினர் உதவியுடன் இங்கிலாந்தில் உள்ள வூகி எனும் இடத்தில் ஒரு பள்ளியில் சிறு வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார் .ஆசிரியராக சில காலம் பணிபுரிந்த பிறகு அவர் கல்லூரி விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார்

குறிப்பிடத்தக்க படைப்புகள்

தொகு
  • தி டைம் மெஷீன்
  • தி இன்விசிபிள் மேன்
  • தி ஐலாண்ட் ஆஃப் டாக்டர் மோரோ
  • தி வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்
  • தி ஃபர்ஸ்ட் மென் ஆன் தி மூன்
  • தி ஷேப் ஆஃப் திங்ஸ் டூ கம்

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஜி._வெல்ஸ்&oldid=3459585" இலிருந்து மீள்விக்கப்பட்டது