ஹெர்பிக்-ஹாரோ பொருள்
புதிதாகத் தோன்றிய விண்மீன்களுக்கு அண்மித்ததாக, நெபுலா போன்ற ஓர் அண்டவெளி அம்சமே ஹெர்பிக்-ஹாரோ பொருள் ஆகும். புதிய விண்மீன்களில் இருந்து மிக வேகமாக ஒடுங்கிய வடிவில் வெளிவரும் வாயுக் கூட்டம் ஏனைய வாயுக்களுடனும், தூசுத் துணிக்கைகளுடனும் மோதும் போது ஹெர்பிக்-ஹாரோ பொருள் உருவாகும். இவை ஏனைய அண்டப் பொருட்களைப் போலல்லாது சில ஆயிரம் வருடங்கள் மாத்திரமே நீடிக்கும்.