செலூக்கஸ் நிக்காத்தருக்கும் அபாமாவிற்கும் பிறந்தவர் ஹெலெனா (ஹெலினா). இவர் சாம்ராட் சக்கரவர்த்தி சந்திர குப்த மெளரியரின் இரண்டாம் மனைவி ஆவார்.

மணவாழ்க்கை தொகு

அலெக்சாண்டரின் மரணத்துக்குப் பிறகு அவர் வென்ற பகுதிகளையெல்லாம் அவரது தளபதி செலுக்கஸ் நிக்கோடர் ஆண்டு கொண்டிருந்தார். கி.மு 317ல் செலுக்கஸ் மீது படையெடுத்தார் சந்திரகுப்தர். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கஸ் ஆண்டு கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் வரை சந்திரகுப்தர் வசம் சென்றது. தவிர செலுக்கஸ் நிக்கோத்தரின் மகளையும் மணம் முடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலெனா&oldid=2712988" இருந்து மீள்விக்கப்பட்டது