1501
நாட்காட்டி ஆண்டு
ஆண்டு 1501 (MDI) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1501 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1501 MDI |
திருவள்ளுவர் ஆண்டு | 1532 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2254 |
அர்மீனிய நாட்காட்டி | 950 ԹՎ ՋԾ |
சீன நாட்காட்டி | 4197-4198 |
எபிரேய நாட்காட்டி | 5260-5261 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1556-1557 1423-1424 4602-4603 |
இரானிய நாட்காட்டி | 879-880 |
இசுலாமிய நாட்காட்டி | 906 – 907 |
சப்பானிய நாட்காட்டி | Meiō 10Bunki 1 (文亀元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1751 |
யூலியன் நாட்காட்டி | 1501 MDI |
கொரிய நாட்காட்டி | 3834 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 25 - போர்த்துக்கீசக் கப்பலோட்டி யாவோ ட நோவா அசென்சன் தீவைக் கண்டுபிடித்தார்.[1]
- சூலை - முதலாம் இசுமாயில் தாபிரிசு நகரைத் தலைநகராகக் கொண்டு அசர்பைஜான் மன்னராக முடி சூடினார். இதன் மூலம் வடக்கு ஈரானில் சபாவித் வம்சத்தைத் தோற்றுவித்தார். சியா இசுலாமை கட்டய சமயமாக அறிவித்தார்.
- சூலை 21 - போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் தனது புகழ்பெற்ற கோழிக்கோடு பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் வந்தடைந்தார்.
- அக்டோபர் 13 - இத்தாலியின் வடக்குப் பகுதிகளை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றியமையை அங்கீகரிக்கும் உடன்பாடு ஆத்திரியாவின் முதலாம் மாக்சிமிலியனுக்கும், பிரான்சின் பன்னிரண்டாம் லூயிக்கும் இடையில் ஏற்பட்டது.
- நவம்பர் 14 வேல்சு இளவரசர் ஆர்தர் எசுப்பானிய இளவரசி கேத்தரீனை மணந்தார்.
- கிபி 1000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வட அமெரிக்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையை போர்த்துக்கீசக் கப்பலோட்டி காசுபார் கோர்ட்-ரியால் பெற்றார்.
- அமெரிகோ வெஸ்புச்சி ஆல்பா செண்டாரி, பீட்டா செண்டாரி ஆகிய இரண்டு விண்மீன்கள், மற்றும் விண்மீன் குழாம் தென்சிலுவையின் விண்மீன்கள் ஆகியவற்றை வரைந்தார்.
பிறப்புகள்
தொகு- மே 6 - இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (இ. 1555)
- செப்டம்பர் 24 - கார்டானோ, இத்தாலிய வானியலாளர் (இ. 1576)
- ஆன் பொலின், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது அரசி (இ. 1536)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Albuquerque, Afonso de (2001). The commentaries of the great Afonso Dalboquerque, second viceroy of India, Adamant Media Corporation, p.xx. Issue 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-9511-7.