1817-1818 பெரும் கிளர்ச்சி

1817-1818 பெரும் கிளர்ச்சி (Great Rebellion of 1817–1818), அல்லது 1818 ஊவா-வெல்லச எழுச்சி (Uva-Wellassa Uprising), அல்லது சுருக்கமாக ஊவா கிளர்ச்சி (Uva Rebellion) என்பது இலங்கையில் பிரித்தானியப் பேரரசுடன் நடத்தப்பட்ட கண்டிப் போர்களின் மூன்றாவது போரைக் குறிக்கும். இது அன்று கண்டி இராச்சியத்துடன் இருந்த இன்று ஊவா மாகாணம் என அழைக்கப்படும் பகுதியில் இடம்பெற்றது. மேல் நாட்டு சிங்களவர் என அழைக்கப்படும் உடரட்ட என்ற பகுதியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஆளுநர் ரொபர்ட் பிரவுன்ரிக் தலைமையிலான பிரித்தானியக் குடியேற அரசுடன் இப்போர் இடம்பெற்றது.[1]

1817-188 இலங்கைக் கிளர்ச்சி
Great Rebellion of 1817-1818
கண்டிப் போர்கள் பகுதி
நாள் 1817–1818
இடம் ஊசா, வெல்லச, பிரித்தானிய இலங்கை
பிருத்தானியர் வெற்றி
பிரிவினர்
கண்டிக் கிளர்ச்ச்சியாளர்கள்  பெரிய பிரித்தானியா
தளபதிகள், தலைவர்கள்
கெப்பட்டிப்பொல திசாவை
வில்பாவை
ரொபர்ட் பிரவுன்ரிக்
பலம்
தெரியவில்லை - தீவு வாரியாக 20,000 முதல் 100,000 வரை தெரியவில்லை
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை

1818ம் ஆண்டுக் கலகம் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியத்துவமான கலகமாக கொள்ளப்படுகின்றது. இந்தக்கலகத்தை பிரித்தானியப் படையினர் அடக்கினாலும்கூட, இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிலையாகக் கொள்ளப்படுகின்றது. இக்கலகம் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதல் கலகமாகவும் கொள்ளப்படுகிறது.

பின்னணி

தொகு

கண்டி இராச்சியத்தின் விக்கிரம ராஜசிங்க மன்னனைப் பதவியில் இருந்து அகற்ற, கண்டி மக்கள் பிரித்தானியருக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும், அவர்களின் ஆட்சி தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. மக்கள் மன்னாராட்சியை விரும்பினாலும், வேறொரு கண்டத்தில் மன்னர் இருந்து ஆட்சி செய்வதை மக்கள் விரும்பவில்லை. அவர்களின் சடங்குகள், சமய நிகழ்வுகளுக்கு மன்னன் சமுகமளிப்பதை கௌரவமாக அவர்கள் எண்ணினர். பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் பிரதானிகளின் செல்வாக்கினைப் பறிப்பதும் அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஹாஜி மரைக்காயர் எனும் இசுலாமியரை ஊவா மாகாணத்தின் வெல்லச (வெல்லஸ்ஸ) பகுதிக்கு அதிகாரியாக நியமித்தமை, கலகத்திற்கான உடனடிக் காரணமாக அமைந்தது.

தலைமை

தொகு

கிளர்ச்சியை அடக்குவதற்கு ஆரம்பத்தில் கெப்பெட்டிப்பொலை திசாவை என்பவரை பிரித்தானியர் அனுப்பியிருந்தாலும், பின்னர் அவர் கிளர்ச்சியாளருக்கு ஆதரவாக மாறி அவர்களுக்குத் தலைமையும் தாங்கினார். இதனால் இன்றும் இலங்கையில் இவர் போற்றப்படுகிறார். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆட்களையும் பொருட்களையும் தருவித்து உள்ளூர் தலைவர்களுக்கு ஆதரவு தந்தார். அஸ்கிரிய பௌத்த பீடத்தின் தலைவர் வண. வாரியப்பொல சுமங்கல தேரோ ஹங்குரான்கெட்டாவுக்குத் தப்பி ஓடினார். 1817 செப்டம்பர் அளவில் மடுகல்லை பசநாயக்க நிலமை, எல்லேபொல அதிகாரம் ஆகிய இரு கிளர்ச்சித் தலைவர்கள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர். பிலிமத்தலாவை கிளர்ச்சியாளர்களுக்குத் தலைமை தாங்கினார். வியாலிவையின் திசாவையாக இருந்த எல்லேப்பொல, மற்றும் ஒருவரை கண்டி போகம்பரை சிறைச்சாலையில் 1818 அக்டோபர் 27 இல் பிரித்தானியர் சிரச்சேதம் செய்தனர்.[2][3][4][5][6]

1818 ஆண்டு கலகப் போக்கு

தொகு
  • இக்கலகம் 1817 செப்டம்பரில் ஊவாவில் ஆரம்பமானது
  • 1818 ஜனவரியில் கலகம் வெல்லசவிற்குப் பரவியது
  • பருவமழை காரணமாகவும், போக்குவரத்து வசதியின்மை காரணமாகவும் படைகளை உடனடியாக அனுப்பிக் கொள்ள பிரித்தானியருக்கு முடியவில்லை.
  • கலகக்காரர்களுக்கு கண்டி, தும்பறை, ஹேவாஹெட்ட, சப்பிரகமுவ திசாவைகளின் ஒத்துழைப்பு கிடைத்தமை
  • கண்டிக்கலகம் தேசிய நாட்டினவாதத்தின் எழுச்சியாக மாறியமை

கலகம் தோல்வியடைந்தமைக்கான காரணிகள்

தொகு
  • கலகம் ஒழுங்கற்றதாக இடம்பெற்றமை
  • பிரித்தானியரால் கொடுமையான முறையில் அடக்கப்பட்டமை
  • கலகக்காரர்களிடம் சிறந்த தலைமைத்துவம் இல்லாமை
  • சில பிக்குகளினால் கடத்தப்பட்ட புனித தந்தத்தை பிரித்தானியர் மீட்டெடுத்தமை (தந்ததாது எவர் கையில் இருக்கிறதோ அவரே ஆளத்தக்கவர் என சிங்கள மக்கள் நம்பியமை)
  • பிரதானிகளின் ஒரு பகுதியினர் பிரித்தானியருக்குத் தொடர்ந்தும் ஆதரவு அளித்தமை (உதாரணமாக: மொல்லிகொட)

உசாத்துணை

தொகு
  • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
  1. "Sri Lanka is to revoke British Governor's infamous Gazette Notification". Archived from the original on 2 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2016.
  2. Keppetipola and the Uva Rebellion Virtual Library Sri Lanka. Retrieved 2007-10-01.
  3. "Uva Wellassa rebellion - 1817 -1818". Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 October 2014.
  4. "Wellassa riots in 1818". Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
  5. "Torture tree of the British Army". பார்க்கப்பட்ட நாள் 23 October 2014.
  6. 1818 Uva Wellassa rebellion[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1817-1818_பெரும்_கிளர்ச்சி&oldid=3948786" இலிருந்து மீள்விக்கப்பட்டது