1880
1880 (MDCCCLXXX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்).
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 1 - யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி (mail coach) சேவையை ஆரம்பித்தது.
- ஏப்ரல் 15 - இங்கிலாந்தின் பிரதமராக வில்லியம் கிளாட்ஸ்டோன் பதவி ஏற்றார்
- மே 13 - நியூ ஜேர்சியில் தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது மின்சாரத் தொடருந்தை சோதித்துப் பார்த்தார்.
- ஜூன் 29 - டாஹிட்டியை பிரான்ஸ் இணைத்துக்கொண்டது.
- ஜூலை - இலங்கையில் முதலாவது மின்சாரத் தொலைபேசிச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 5 ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
- அக்டோபர் 1 - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மணி ஓர்டர் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- நவம்பர் 11 - ஆஸ்திரேலியாவின் வங்கிக் கொள்ளைக்காரனும் bushrangerஉமான நெட் கெலி (Ned Kelly) மெல்பேர்ணில் தூக்கிலிடப்பட்டான்.
- கொலோன் கதீட்ரல் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.