1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (சுவீடியம்: ஒலிம்பிஸ்கா சொம்மர்ஸ்பெலென் 1912), அலுவல்முறையாக ஐந்தாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the V Olympiad) சுவீடனின் இசுடாக்கோமில் 1912ஆம் ஆண்டு மே 5 நாளிலிருந்து சூலை 22 வரை நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1] இருபத்து-எட்டு நாடுகளும் 48 பெண்கள் உள்ளிட்ட 2,408 போட்டியாளர்களும் 14 விளையாட்டுக்களில் 102 போட்டிகளில் பங்கேற்றனர். அலுவல்முறையான துவக்கவிழா நடந்த சூலை 6 இலிருந்து அனைத்து போட்டிகளும், மே 5 அன்று துவங்கிய டென்னிசு போட்டிகளும் சூன் 29 அன்று துவங்கிய காற்பந்து, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நீங்கலாக, ஒருமாதத்திற்குள் நடைபெற்றன. முழுமையும் தங்கத்தாலான பதக்கங்கள் வழங்கப்பட்ட கடைசி ஒலிம்பிக் போட்டியாக அமைந்தது. ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்களுக்கேற்ப ஐந்து கண்டங்களும் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் என்ற பெருமையும் பெற்றது; முதல்முறையாக ஆசியாவிலிருந்து சப்பான் பங்கேற்றது. [2]

1912 ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகள்

இந்த ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக பெண்களுக்கான நீரில் பாய்தல், நீச்சற் போட்டி போட்டிகளும் ஆண்களுக்கான டெகாத்லான், பென்டாத்லான் போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. தடகளப் போட்டிகளில் மின்சார நேரமளவை அறிமுகப்படுத்தபட்டது. ஆனால் குத்துச்சண்டை போட்டிகள் நடத்த சுவீடன் ஒப்பவில்லை. இந்தப் போட்டிகளில் மிகக் கூடுதலான தங்கப் பதக்கங்களை ஐக்கிய அமெரிக்காவும் (25) மிகக் கூடுதலான மொத்த பதக்கங்களை சுவீடனும் (65) வென்றன.

பதக்கப் பட்டியல்தொகு

1912 ஒலிம்பிக் போட்டிகளில் மிகக் கூடிய பதக்கம் வென்ற முதல் பத்து நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.[3] இந்த ஒலிம்பிக்கில்தான் கடைசியாக திடமான தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.[4]

வரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 25 19 19 63
2   சுவீடன் (நடத்தும் நாடு) 24 24 17 65
3   ஐக்கிய இராச்சியம் 10 15 16 41
4   பின்லாந்து 9 8 9 26
5   பிரான்சு 7 4 3 14
6   செருமனி 5 13 7 25
7   தென்னாப்பிரிக்கா 4 2 0 6
8   நோர்வே 4 1 4 9
9   கனடா 3 2 3 8
  அங்கேரி 3 2 3 8

மேற்சான்றுகள்தொகு

  1. Sports Reference.com (SR/Olympics), "1912 Stockholm Summer Games" பரணிடப்பட்டது 2013-03-02 at the வந்தவழி இயந்திரம்; retrieved 2012-7-23.
  2. Zarnowski, C. Frank. "A Look at Olympic Costs," பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம் Citius, Altius, Fortius (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 20 [5 of 17 PDF]; retrieved 2012-7-24.
  3. Byron, Lee; Cox, Amanda; Ericson, Matthew (4 August 2008). "A Map of Olympic Medals". The New York Times. http://www.nytimes.com/interactive/2008/08/04/sports/olympics/20080804_MEDALCOUNT_MAP.html. பார்த்த நாள்: 7 July 2012. 
  4. "1912 - Stockholm". Sporting Life. 20 June 2012. Archived from the original on 25 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181225173102/https://www.sportinglife.com/error/404/london-2012/history/1912-stockholm. பார்த்த நாள்: 8 July 2012. 

வெளி இணைப்புகள்தொகு