1983 மட்டக்களப்பு சிறை உடைப்பு
1983 மட்டக்களப்பு சிறையுடைப்பு (1983 Batticaloa Jailbreak) 1983 செப்டம்பர் 23 அன்று இலங்கை மட்டக்களப்பில் இடம்பெற்றது.[1][2][3] 1983 சூலை 23-25 ஆகிய நாட்களில் இடம்பெற்ற கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகளின் போது உயிர் தப்பிய தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிங்களப் பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்புக் கூடிய சிறைச்சாலை ஒன்றுக்கு மாற்றப்படவிருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து, 41 தமிழ் அரசியல் கைதிகள் அங்கிருந்து தப்பியோட திட்டம் தீட்டினர். வெளியார் உதவியுடன், கடத்தப்பட்ட சில ஆயுதங்களின் உதவியுடன் அவர்கள் சில குழுக்களாக சிறையில் இருந்து தப்பினர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அங்கு வேறு காரணங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்த 150 கைதிகளும் தப்பியோடினர். இச்சிறையுடைப்பில் இராமலிங்கம் பரமதேவா, பனாகொடை மகேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா, எஸ். ஏ. டேவிட் போன்ற முக்கிய அரசியல் கைதிகளும், மற்றும் சில விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் தப்பினர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றனர். இச்சிறையுடைப்பில் தப்ப முடியாமல் போன பெண் கைதி ஒருவரை 1984 சிறையுடைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தப்பிக்க வைத்தனர்.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Batticaloa Jailbreak". Tamil Times. நவம்பர் 1983. Archived from the original on 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2017-09-23.
- ↑ "Asia Times: Chapter 30: Whirlpool of violence". Archived from the original on 2002-12-03. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ "The Jail Break". SangamOrg. 2004-08-21. http://www.sangam.org/articles/view2/?uid=508. பார்த்த நாள்: 2009-01-01.