1988 பஞ்சாப் வெள்ளம்
1988 பஞ்சாப் வெள்ளம் (1988 Punjab floods) 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாபில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைக் குறிக்கிறது. மாநிலத்தில் இருந்த அனைத்து ஆறுகளும் நிரம்பி வழிந்த காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் இடம்பெயர்ந்தும் இன்னல்களுக்கு ஆளாகினர். பஞ்சாப் மாநிலம் அதன் மிகவும் பேரழிவுகரமான வெள்ளத்தை அப்போது சந்தித்தது.[1]
1988 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நான்கு நாட்களில், பக்ரா பகுதியில் 634 மிமீ மழை பெய்தது.[1] மக்கள் தங்கள் பயிர்களை இழந்தனர். பியாசு பக்ரா மேலாண்மை வாரியம் மீது குற்றம் சாட்டப்பட்டு, அணையிலிருந்து தண்ணீரை விடுவித்து வெள்ளத்தைத் தூண்டியதற்கு வாரியம் பொறுப்பாக்கப்பட்டது.
வெள்ளத்தில் பியாசு பக்ரா நிர்வாக வாரியத்தின் மெத்தனப் போக்கிற்கு பழிவாங்கும் விதமாக பக்ரா பியாசு மேலாண்மை வாரியத்தின் தலைவர் பி. என். குமார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2][3]
பஞ்சாபின் 12,989 கிராமங்களில் 9,000 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அவற்றில் 2,500 கிராமங்களுக்கும் மேற்பட்டவை முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின. அல்லது அடித்துச் செல்லப்பட்டன. இது பஞ்சாப் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய வெள்ளமாகும். ஏனெனில் இவ்வெள்ளம் 34 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை பாதித்தது. மக்கள் உயிர்வாழவும் வெள்ளத்தை நிர்வகிக்கவும் முயன்றபோது, மத்திய விவசாய அமைச்சர் பச்சன் லாய் வெள்ளம் ஒரு ஆசீர்வாதம் என்று கண்மூடித்தன்மாகக் கூறினார்-வெள்ளம் பஞ்சாபின் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் என்பது அவரது தர்க்கமாக இருந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Mudgal, Vipul (October 31, 1988). "Floods reverse crop prospects in Punjab". India Today.
- ↑ Mudgal, Vipul (November 30, 1988). "Terrorist violence escalates in Punjab". India Today.
- ↑ "India Floods Oct 1988 UNDRO Information Report 1 - India". ReliefWeb.