2008 சிச்சுவான் நிலநடுக்கம்

(2008 சிசுவன் பூகம்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2008 சிச்சுவன் பூகம்பம் என்பது சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும். ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் அளவு சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம், சீன நேரப்படி 2008 மே 12 ஆம் நாள் மதியம் 14:28:01.42 மணியளவில் நிகழ்ந்தது. 1976-ல் டாங்சான் மாகாணத்தைத் தாக்கிய பூகம்பத்திற்கு பிறகு சீனாவைத் தாக்கிய மிக மோசமான பூகம்பமாக இது கருதப்படுகிறது[6].

2008 சிச்சுவான் நிலநடுக்கம்
2008 Sichuan earthquake
நாள்மே 12, 2008
நிலநடுக்க அளவு7.9 Ms[1] / 8.0 Mw[2]
ஆழம்19 கிலோமீட்டர்கள் (12 mi)
நிலநடுக்க மையம்30°59′20″N 103°19′44″E / 30.989°N 103.329°E / 30.989; 103.329 (சிச்சுவான் நிலநடுக்கம்) (சிச்சுவான் மாகாணம்)
பாதிக்கப்பட்ட பகுதிகள் சீனா
ஆழிப்பேரலைஇல்லை
பின்னதிர்வுகள்இது வரையில் 76 கடுமையான பின்விளைவுகள்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெலிதானவை[3]
உயிரிழப்புகள்70,000(இறந்தோர்)
4 லட்சம்(காயம்)
மே 19, 2008 தரவுகள்.[4][5]

நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகள்

தொகு

சிச்சுவான் மாகாணத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் சீனாவின் (1560 கி.மீ தள்ளியிருக்கும்) பீஜிங், ஷாங்காய் (1744 கி.மீ தள்ளியிருக்கும்), ஆகிய பெருநகரங்களிலும் தைவான் (1912 கி.மீ தள்ளியிருக்கும்), தாய்லாந்து (1940 கி.மீ தள்ளியிருக்கும்) ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.[7]

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள்

தொகு

70000 மனிதர்களின் உயிரைக் குடித்த இந்த நிலநடுக்கத்தினால் 4 லட்சம் மக்கள் காயமடைந்துள்ளனர், 50 லட்சம் மக்கள் வீடுகள் இழந்துள்ளனர். தரைமட்டமாகிவிட்ட 31.3 லட்சம் கட்டிடங்களையும் சேர்த்து 156.10 லட்சம் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.[7]. மேலும் இறந்த 70,000 பேரில் 19065 பள்ளி மாணவர்கள் என்று சீனாவின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Magnitude of SW China earthquake revised to 8.0". Xinhua News Agency. 2008-05-18. http://news.xinhuanet.com/english/2008-05/18/content_8200572.htm. பார்த்த நாள்: 2008-05-18. 
  2. "Magnitude 7.9 - EASTERN SICHUAN, CHINA". United States Geological Survey. 2008-05-12. http://earthquake.usgs.gov/eqcenter/recenteqsww/Quakes/at00057368.php. பார்த்த நாள்: 2008-05-12. 
  3. Sichuani province hit by another strong earthquake பரணிடப்பட்டது 2008-12-05 at the வந்தவழி இயந்திரம், Reuters (எசுத்தோனியம்)
  4. "China earthquake death toll rises to 34,073". Xinhua. 2008-05-19. http://news.xinhuanet.com/english/2008-05/19/content_8207489.htm. பார்த்த நாள்: 2008-05-19. (ஆங்கிலம்)
  5. "Casualties in Wenchuan Earthquake" (in Chinese). Sina.com. 2008-05-19. http://news.sina.com.cn/pc/2008-05-13/326/651.html. பார்த்த நாள்: 2008-05-19. 
  6. http://www.shanghaidaily.com/article/?id=381523&type=National
  7. 7.0 7.1 http://asc-india.org/lib/20080512-sichuan.htm
  8. http://chinadigitaltimes.net/2008/11/china-says-quake-school-toll-over-19000/