2011 மின்ஸ்க் மெட்ரோ குண்டு வெடிப்பு

2011 ஏப்ரல் 11 அன்று மாலை 6 மணியளவில் பெலாருசின் தலைநகர் மின்ஸ்கில் ஒக்டியாபிரஸ்கயா என்ற மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு குண்டு வெடிப்பு நேர்ந்தது. இதன் போது 15 பேர் இறந்தனர் மற்றும் 204 பேர் காயமுற்றனர். பெலருஸ் குடியரசுத் தலைவர் அலெக்சாண்டர் லுகசெங்கோவின் கூற்றுப்படி இக்குண்டுவெடிப்பு பெலருசின் அமைதியைக் குலைக்க நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தாலும் குண்டுவெடிப்பு பற்றிய மேலதிகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

2011 மெட்ரோ குண்டு வெடிப்பு
ஒக்டியாபிரஸ்கயா நிலையத்துக்கு வெளியே அவசர சேவை ஊர்திகள்
இடம்ஒக்டியாபிரஸ்கயா மெட்ரோ இரயில் நிலையம், மின்ஸ்க், பெலருஸ்
ஆள்கூறுகள்53°54′6.84″N 27°33′41.04″E / 53.9019000°N 27.5614000°E / 53.9019000; 27.5614000
நாள்11 ஏப்ரல் 2011
17:56 (UTC+3)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
மின்ஸ்க் மெட்ரோ
ஆயுதம்ஆணி குண்டு[1]
இறப்பு(கள்)15[2]
Victim204 காயம்[2][3]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
சிமித்ரி கனவலாவு, உலாட் கவால்யு

மேற்கோள்கள் தொகு