2013 கம்துனி குழுபாலியல் வல்லுறவுக் கொலை வழக்கு

7 ஜூன் 2013 அன்று, 20 வயது கல்லூரி மாணவர் கடத்தப்பட்டு, கொல்கத்தாவில் இருந்து 20 கிமீ தொலைவில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் பராசத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள கம்துனி கிராமத்தில் குழு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2016 ஜனவரியில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. [1]

சம்பவம் தொகு

பாதிக்கப்பட்டவர் தெரோசியோ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பயிலும் மாணவி சிப்ரா கோசு ஆவார். இவர் மதியம் கம்துனி பிடிஓ அலுவலக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மகிழுந்துவில் கடத்திச் செல்லப்பட்டு தொழிற்சாலையில் வைத்து எட்டு பேர் குழு பாலியல் வல்லுறவில் ஈடுப்பட்டனர்.பாலியல் வல்லுறவு செய்த பிறகு, குற்றவாளிகள் அவளது கால்களை தொப்புள் வரை கிழித்து, தொண்டையை அறுத்து, உடலை அருகில் உள்ள வயலில் வீசினர். [2]

உள்ளூர் நேரப்படி இரவு 8:30 மணியளவில், பாதிக்கப்பட்டவரின் சகோதரர்கள் தங்கள் சகோதரியின் உடலை ராஜரிஹத்தில் உள்ள காரிபரி என்ற பிகா பகுதியில் ஒரு உவர் நீர்ப் பரப்பில் கண்டுபிடித்தனர். [3] இரவு 9:45 மணியளவில், பலியானவரின் உடலை மீட்க முயன்றபோது கிராம மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. அந்தக் குழுவினர் மூன்று காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியது. அதிகாலை 2 மணியளவில், ஒரு பெரிய காவல் துறை படையினர் பாதிக்கப்பட்டவரின் உடலை கிராம மக்களிடமிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பராசத்துக்கு அனுப்பினர். [4]

ஜூன் 15 மாலை, இந்திய படைத் துறைப் பிரிவின் ஒரு குழு கம்துனியில் கொடி அணிவகுப்பைத் தொடங்கியது. [5] துணை இராணுவம் இருந்தபோதிலும், குடிமக்கள் மன்றத்தின் குழு கம்துனிக்கு விஜயம் செய்தது. [6] மாதங்கினி மகிளா சமிதி, மைத்ரி, மனாபி, அகல்யா மற்றும் சேதானா உட்பட பல பெண்கள் அமைப்புகள் கம்துனிக்கு வருகை தந்தனர். [6]

ஜூன் 17 அன்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கம்துனிக்கு சென்றார். சம்பவம் நடந்த 15 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க தனது அரசு வாதாடும் என்றும் அவர் உறுதியளித்தார். [7]

கைது மற்றும் வழக்கு தொகு

கம்துனியில் வசிப்பவர்கள் முக்கிய குற்றவாளியான அன்சார் அலியை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பிறகு, அவர் மற்ற நான்கு பேருடன் சேர்ந்து குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார். முதல் தகவல் அறிக்கையில் ஐந்து பேரின் பெயர் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட காவல் துறையினர் ஜூன் 8 அதிகாலையில் மூன்று பேரை கைது செய்தனர். [4]

இந்த வழக்கை மேற்கு வங்கத்தின் சிறப்பு குற்றப் பிரிவு விசாரித்து வருகிறது. காவல் துறை மற்றும் இந்திய படைத்துறைப் பிரிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சம்பவத்தை புனரமைப்பதற்காக குற்றவாளிகள் எட்டு பேரையும் ஜூன் 16 அன்று கம்துனிக்கு அழைத்துச் சென்றனர். 45 நிமிடங்களுக்கு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாங்கள் எப்படி பாலியல் பலாத்காரம் செய்தோம், பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்வாறு கொன்றோம், பின்னர் அவரது உடலை செட் சுவரின் மீது எவ்வாறு வீசினார்கள் என்பதை விளக்கினார்கள் சம்பவம் நடந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. ஜூன் 22 அன்று, அன்சார் அலி 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். [8] [9]

சான்றுகள் தொகு

  1. "Kamduni gangrape case verdict: Kolkata court sentences 3 convicts to death, life imprisonment to 3 others".
  2. "West Bengal: Kamduni victims kin want death for rapists". பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
  3. "তরুণীর দেহ উদ্ধার, সন্দেহ ধর্ষণ করে খুন" இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225175539/http://www.epaper.eisamay.com/Details.aspx?id=4272&boxid=22926640. 
  4. 4.0 4.1 "প্রকাশনামেয়ে হারিয়ে ফুঁসছে বারাসত" இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225175517/http://www.epaper.eisamay.com/Details.aspx?id=4322&boxid=22547468. 
  5. Das, Atanu (17 June 2013). "কামদুনির প্রতিবাদ থামতেই কি গ্রামে হাজির আধা সেনা" (in Bengali). Ei Samay (Kolkata) இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225175538/http://www.epaper.eisamay.com/Details.aspx?id=4493&boxid=3436218. 
  6. 6.0 6.1 Das, Atanu (17 June 2013). "কামদুনির প্রতিবাদ থামতেই কি গ্রামে হাজির আধা সেনা" (in Bengali). Ei Samay (Kolkata) இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225175521/http://www.epaper.eisamay.com/Details.aspx?id=4496&boxid=31446125. 
  7. . 18 June 2013. 
  8. "কামদুনি-কাণ্ডে চার্জশিট জমা পড়ল না ১৫ দিনে" (in Bengali). Ei Samay (Kolkata). 22 June 2013. http://eisamay.indiatimes.com/articleshow/20718830.cms. 
  9. "১৫ দিন পরেও চার্জশিট পেশ হল না" (in Bengali). ABP Ananda. 23 June 2013 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225175535/https://abpananda.abplive.in/404.