2015 கனடா நடுவண் அரசுத் தேர்தல்

2015 கனடிய நடுவண் அரசுத் தேர்தல் (2015 Canadian federal election) அல்லது 42வது கனடியப் பொதுத் தேர்தல் கனடிய நாடாளுமன்றத்தின் பொதுச் சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2015 அக்டோபர் 19 அன்று நடைபெற்றது. லிபரல் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இதன் தலைவர் ஜஸ்ரின் ரூடோ பிரதமராக அறிவிக்கப்படவுள்ளார்.[1]

கனடா நடுவண் அரசுத் தேர்தல், 2015

← 2011 அக்டோபர் 19, 2015 (2015-10-19) 43வது →

கனடிய நாடாளுமன்றத்தில் 338 இடங்கள்
170 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  First party Second party Third party
  Justin Trudeau 2014 (cropped).jpg Stephen Harper 2014 (cropped).jpg Thomas Mulcair 2015 (cropped).jpg
தலைவர் ஜஸ்ரின் ரூடோ இசுட்டீவன் கார்ப்பர் தோமஸ் முல்கேயர்
கட்சி லிபரல் கட்சி பழமைவாதக் கட்சி புதிய சனநாயகக் கட்சி
தலைவராக ஏப்ரல் 14, 2013 மார்ச் 20, 2004 மார்சு 24, 2012
தலைவரின் தொகுதி பப்பினோ கால்கரி மரபு Outremont
முந்தைய தேர்தல் 34 இடங்கள், 18.91% 166 இடங்கள், 39.62% 103 இடங்கள், 30.6%
Seats before 36 159 95
வென்ற தொகுதிகள் 184 99 44
மாற்றம் Green Arrow Up Darker.svg148 Red Arrow Down.svg60 Red Arrow Down.svg51
மொத்த வாக்குகள் 6,930,136 5,600,496 3,459,826
விழுக்காடு 39.47% 31.89% 19.7%

முந்தைய பிரதமர்

இசுட்டீவன் கார்ப்பர்
பழமைவாதிகள்

பிரதமர்-தெரிவு

ஜஸ்டின் டுரூடோ
லிபரல்

முக்கிய விடயங்கள்தொகு

பொருளாதாரம், வரி, நல்லாட்சி, அகதிகள், பணி வாய்ப்புகள், பழங்குடி மக்களின் சிக்கல்கள் உட்பட்ட பல்வேறு சிக்கல்கள் இந்தத் தேர்தலில் முக்கிய விடயங்களாக இடம்பெற்றன.[2]

 • சாசனம் C-51 - Anti-terrorism Act, 2015
 • வரி
 • வேலை உருவாக்கம்
 • சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம்
 • ரான்சு பசிபிப் பார்னர்சிப் - Trans-Pacific Partnership
 • கனடியப் பழங்குடி மக்கள் சிக்கல்கள்
 • நல்லாட்சி
 • சிறுவர் பராமரிப்பு இடங்கள் / நல்கை
 • நிகாப் அணிதல் (niqab)
 • சிரியன் அகதிகள் - Refugees of the Syrian Civil War
 • கஞ்சாவை குற்றம் விலக்கல்
 • செனட்டர் மைக் டப்பி குறித்த விசாரணை

முடிவுகள்தொகு

184 99 44 10 1
லிபரல் பழமைவாதிகள் புதிய சனநாயகம் கிபெ

சுருக்கம்தொகு

கட்சி வாக்குகள் இடங்கள்
லிபரல் 6,930,136
39.5%
  20.6%
184 / 338 (54%)
பழமைவாதிகள் 5,600,496
31.9%
  7.7%
99 / 338 (29%)
புதிய சனநாயகம் 3,461,262
19.7%
  10.9%
44 / 338 (13%)
கியூபெக்வா 818,652
4.7%
  1.2%
10 / 338 (3%)
பசுமை 605,864
3.4%
  0.5%
1 / 338 (0.3%)
42வது கனடிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் – கட்சி வாரியாக வென்ற/தோற்ற இடங்கள், 2011–2015
கட்சி 2011 கட்சிகளிடம் இருந்து பெற்றவை (இழந்தவை) 2015
லிபரல் பழமை புசக கியூ பசுமை
லிபரல் 36 96 51 1 184
பழமைவாதிகள் 188 (96) (3) 99
புதிய சனநாயகம் 109 (51) 3 (7) 44
கியூபெக்வா 4 (1) 7 10
பசுமை 1 1
மொத்தம் 338 (148) 99 55 (6) 338

தமிழ் வேட்பாளர்கள்தொகு

இத் தேர்தலில் ஆறு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[3] தமிழர்கள் பெருமளவில் வாழும் இசுகார்புரோ, மார்க்கம், பிரம்ப்டன் பகுதிகளில் வேட்பாளர்களாக நின்றனர். இவர்களில் கரி ஆனந்தசங்கரி மட்டுமே வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் வெற்றி பெற்ற ராதிகா சிற்சபையீசன் தோல்வியடைந்தார்.

 • ராதிகா சிற்சபேசன் - இசுகார்புரோ ரூச் நோர்த் - புதிய சனநாயகக் கட்சி
 • கே. எம் சாந்திகுமார் -இசுகார்புரோ ரூச் பார்க் - புதிய சனநாயகக் கட்சி
 • செந்தி செல்லையா - மார்க்கம் தோர்ன்கில் - புதிய சனநாயகக் கட்சி
 • காரி ஆனந்தசங்கரி - இசுகார்புரோ ரூச் பார்க் - லிபிரல் கட்சி
 • றொசான் நல்லரட்ணம் - இசுகார்புரோ சவுத் வெசுட்- பழமை வாதக் கட்சி
 • கார்த்திகா கோபிநாத் - பிரம்ப்டன் மேற்கு - பசுமைக் கட்சி

மேற்கோள்கள்தொகு