2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டிகள்

2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டிகளும் இடம்பெற்றன. இந்தப் போட்டிகள் 2016 ஆகத்து 6 இல் தொடங்கி ஆகத்து 12 ஆம் நாளில் நிறைவுற்றன.

வில்வித்தை
Games of the XXXI Olympiad
இடம்சம்பதிரோம் மார்க்கஸ் த சபுசாய்
நாட்கள்6–12 ஆகஸ்டு
போட்டியிட்டோர்128
«20122020»

போட்டி தொகு

மொத்தமாக 128 வீரர்கள் பங்கேற்றனர். ஆடவர் தனிப் பிரிவு, பெண்டிர் தனிப் பிரிவு, ஆடவர் குழு, பெண்டிர் குழு என நான்கு பிரிவுகளில் போட்டியிட்டனர்.[1]

இந்த நான்கு போட்டிகளும் உலக வில்வித்தை கூட்டமைப்பின் விதிகளுக்கு நடைபெற்றன. முதல் சுற்றில் 64 ஆடவரும், 64 பெண்டிரும் தனித்தனியாக பங்கேற்றனர். இவர்கள் 72 அம்புகளை எய்ய வேண்டும். இந்த சுற்றில் 64 பேரின் திறமையும் தரவரிசையில் இடம்பெற்றது.

தனி நபர் போட்டிகள் தொகு

தனி நபர் போட்டிகளில் பங்கேற்ற 64 பேரும் அடுத்த சுற்றுக்கு தேர்வாயினர். ஒரு தொகுப்புக்கு மூன்று அம்புகள் என கணக்கிட்டு, சிறப்பாக எய்யப்பட்ட அம்புகள் அடங்கிய ஐந்து தொகுப்புகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் புள்ளிகள் கணக்கிடப்பட்டன. ஒவ்வொரு சிறந்த தொகுப்பை பெற்ற வீரருக்கும் இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன. இரு வீரர்களின் அம்புத் தொகுப்புகளும் ஒரே அளவிலான புள்ளிகளை பெற்றிருந்தால் இருவருக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். ஐந்து தொகுப்புகள் முடிந்த பின்னரும் இரு வீரர்கள் ஐந்துக்கு ஐந்து என சமபுள்ளிகளை பெற்றிருந்தால், மீண்டும் ஒரு போட்டி நடத்தப்படும். இருவருக்கும் ஒரு அம்பு வழங்கப்பட்டு, யாரொருவர் இலக்குக்கு நெருக்கமாக அம்பை பதியச் செய்கிறாரோ அவரே வெற்றியாளராக கருதப்படுவார்.

குழுப் போட்டிகள் தொகு

குறைந்த புள்ளிகளை பெற்ற நான்கு குழுக்கள் காலிறுதியில் வெளியேறுவர். ஏனையோர் காலிறுதிக்கு முன்னேறுவர்.

அட்டவணை தொகு

நாள் தேதி தொடங்கும் நேரம் முடிவடையும் நேரம் போட்டி கட்டம்
தொடக்க நாள் வெள்ளி, ஆகஸ்டு 5, 2016 ஆடவர் தனிச்சுற்று தரவரிசைச்சுற்று
பெண்டிர் தனிச்சுற்று தரவரிசைச் சுற்று
முதல் நாள் சனி, ஆகஸ்டு 6, 2016 9:00 17:45 ஆடவர் குழுப் போட்டிகள் தகுதிநீக்கச்சுற்று
இரண்டாம் நாள் ஞாயிறு 7, ஆகஸ்டு 2016 9:00 17:45 பெண்டிர் குழுப் போட்டிகள் தகுதிநீக்கச்சுற்று
மூன்றாம் நாள் திங்கள், ஆகஸ்டு 8, 2016 9:00 17:45 ஆடவர் தனிப்பிரிவு 1/32 & 1/16 தகுதிநீக்கம்
பெண்டிர் தனிப்பிரிவு 1/32 & 1/16 தகுதிநீக்கம்
நான்காம் நாள் செவ்வாய், ஆகஸ்டு 9, 2016 9:00 17:45 ஆடவர் தனிப்பிரிவு 1/32 & 1/16 தகுதிநீக்கம்
பெண்டிர் தனிப்பிரிவு 1/32 & 1/16 தகுதிநீக்கம்
ஐந்தாம் நாள் புதன், ஆகஸ்டு 10, 2016 9:00 18:55 ஆடவர் தனிப்பிரிவு 1/32 & 1/16 தகுதிநீக்கம்
பெண்டிர் தனிப்பிரிவு 1/32 & 1/16 தகுதிநீக்கம்
ஆறாம் நாள் வியாழன், ஆகஸ்டு 11, 2016 9:00 17:10 பெண்டிர் தனிப்பிரிவு 1/8 தகுதிநீக்கம்/காலிறுதி/அரையிறுதி/பதக்கச்சுற்று
ஏழாம் நாள் வெள்ளி, ஆகஸ்டு 12, 2016 9:00 17:10 ஆடவர் தனிப்பிரிவு 1/8 தகுதிநீக்கம்/காலிறுதி/அரையிறுதி/பதக்கச்சுற்று

தகுதி தொகு

ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அதிகபட்சமாக ஆறு போட்டியாளர்கள் வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அதிகபட்சமாக மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமே ஒரு நாட்டில் இருந்து பங்கேற்க முடியும்.[2]

போட்டியை நடத்தும் நாடு என்பதால் பிரேசில் நாட்டின் சார்பாக ஆறு போட்டியாளர்கள் பங்கேற்கலாம். மேலும் ஆறு போட்டியாளர்களை மூவர் குழு தேர்வு செய்யும். மீதமுள்ள 116 போட்டியாளர்களை ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்து அனுப்பும்.

ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்க, ஒவ்வொரு போட்டியாளரும் கீழ்க்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

  • ஆண்: 70மீ சுற்றில் 630
  • பெண்: 70மீ சுற்றில் 600

2015 ஜூலை முதல் 2016 ஜூலை வரையில், உலகளவில் நடத்தப்பட்ட போட்டியொன்றில் மேற்கூறிய புள்ளிகளை போட்டியாளர்கள் பெற்றிருந்தால் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

பங்கேற்கும் நாடுகள் தொகு

2916 கோடை ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டிகளில் 56 நாடுகளில் இருந்து வில்வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.

பதக்கம் பெற்றவர்களின் சுருக்கம் தொகு

பதக்க அட்டவணை தொகு

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   தென் கொரியா 4 0 1 5
2   ஐக்கிய அமெரிக்கா 0 1 1 2
3   செருமனி 0 1 0 1
  பிரான்சு 0 1 0 1
  உருசியா 0 1 0 1
6   ஆத்திரேலியா 0 0 1 1
  சீன தைப்பே 0 0 1 1
மொத்தம் 4 4 4 12
  1. "Archery". Archived from the original on 13 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  2. "Archery Qualification" (PDF). உலக வில்வித்தைக் கூட்டமைப்பு. Archived from the original (PDF) on 12 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)