2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

31வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள்

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், (2016 Summer Olympics), அலுவல்முறையில் 31வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXXI Olympiad) அல்லது ரியோ டி செனேரோ 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகத்து 5, 2016 முதல் ஆகத்து 21, 2016 வரை பிரேசிலின் இரியோ டி செனீரோ மாநகரத்தில் நடைபெற்ற உலக ஒலிம்பிக் விளையாட்டுக்களாகும்.[2] 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களும் இதே நகரத்தில் இதே குழுவின் மேற்பார்வையில் செப்டம்பர் 7 முதல் 18 வரை நடைபெற உள்ளன. அக்டோபர் 2, 2009 இல் கோபனாவன், டென்மார்க்கில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 121ஆவது அமர்வில் போட்டிகளை நடத்தும் நகரமாக இரியோ டி செனீரோ அறிவிக்கப்பட்டது.

Games of the XXXI Olympiad
A green, gold and blue coloured design, featuring three people joining hands in a circular formation, sits above the words "Rio 2016", written in a stylistic font. The Olympic rings are placed underneath.
நடத்தும் நகரம்இரியோ டி செனீரோ, பிரேசில்
குறிக்கோள்A new world
(போர்த்துக்கேய மொழி: Um mundo novo)
பங்குபெறும் நாடுகள்207[1]
வீரர்கள்11,238[1]
நிகழ்ச்சிகள்306 in 28 விளையாட்டுக்கள் (41 பிரிவுகள்)
துவக்கம்5 ஆகத்து
நிறைவு21 ஆகத்து
திறந்து வைத்தவர்
மைக்கேல் தொமர் (பிரேசில் துணைத் தலைவர்)
தீச்சுடர் ஏற்றியோர்
வாண்டெர்லி டி லிமா
அரங்குமரக்கானா
கோடைக்காலம்
குளிர்காலம்
2016 Summer Paralympics

பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் போட்டியிடப்படும் விளையாட்டுக்களின் எண்ணிக்கையிலும் இந்த ஒலிம்பிக்சு சாதனை நிகழ்த்தியுள்ளது. 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் 10,500க்கும் கூடுதலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்; முதன்முறையாக கொசோவோவும் தெற்கு சூடானும் பங்கேற்றன.[3] 28 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மொத்தம் 306 பதக்க கணங்கள் வழங்கப்பட்டன; 2009இல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு சேர்த்த எழுவர் ரக்பி, குழிப்பந்தாட்டம் போட்டிகளும் இதில் அடங்கும். நடத்தப்படும் நகரத்தின் 33 நிகழிடங்களிலும், சாவோ பாவுலோ, பெலோ அரிசாஞ்ச், சவ்வாதோர், பிரசிலியா, மனௌசு நகரங்களில் ஒவ்வொரு இடத்திலும் போட்டிகள் நடந்தன.

வரலாற்றுச் சிறப்புகள்

தொகு
  • இது தாமசு பாக் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளாகும்.[3]
  • தென் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளாகும். முன்னதாக 1968ஆம் ஆண்டில் வட அமெரிக்க கண்டத்தில் இருக்கும் இலத்தீன் அமெரிக்காவின் அங்கமான மெக்சிகோவில் நடைபெற்றுள்ளது.
  • போர்த்துக்கேய மொழி பேசப்படும் நாடொன்றில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டதும் இதுவே முதல்முறையாகும்.
  • போட்டிகள் முழுமையும் நடத்தப்படும் நாட்டின் குளிர்காலத்தில் நிகழ்ந்த முதல் ஒலிம்பிக் கோடைக்கால போட்டிகளாகும். இதற்கு முன்னதாக 2000 ஒலிம்பிக் போட்டிகள் தெற்கு அரைக்கோளத்தின் இளவேனில் சம இரவுநாளுக்கு 5 நாட்கள் முன்பாக செப்டம்பர் 15இல் துவங்கின.
  • இலத்தீன் அமெரிக்காவில் 1968க்குப் பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது ஒலிம்பிக் போட்டிகளாகும்.
  • தெற்கு அரைக்கோளத்தில் மூன்றாம் முறையாக நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளாகும்.[4]
  • விளையாட்டுத்திறமையுள்ள அகதிகள் பங்கேற்பதற்காக முதன் முறையாக அகதிகள் ஒலிம்பிக் அணி உருவாக்கப்பட்டு பங்கேற்றது. இவ்வணி ஒலிம்பிக் கொடியை பயன்படுத்துகிறது.

இந்திய அணியின் பங்கேற்பு

தொகு

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒலிம்பிக் விளையாட்டு வீரர் அபினவ் பிந்த்ரா ஆகியோர் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.[5]

விளையாட்டுக்கள்

தொகு

துவக்க விழா

தொகு

துவக்கவிழா ஆகத்து 5, 2016 அன்று மரக்கானா விளையாட்டரங்கத்தில் இரவு 8 மணிக்குத் துவங்கி நடந்தது.

விளையாட்டுப் போட்டிகள்

தொகு

2016 கோடை ஒலிம்பிக்கில் 28 விளையாட்டுக்களில் 41 பிரிவுகளில் 306 நிகழ்வுகள் நடைபெற்றன.

காற்பந்தாட்டம்

தொகு

இரியோ டி செனீரோவின் மரக்கானா அரங்கை விட சில காற்பந்தாட்டப் போட்டிகள் சாவோ பாவுலோ, பெலோ அரிசாஞ்ச், சவ்வாதோர், பிரசிலியா, மனௌசு ஆகிய நகரங்களில் உள்ள ஐந்து அரங்குகளில் நடைபெற்றன.

பங்கேற்கும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள்

தொகு
 
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அணி எண்ணிக்கை

அனைத்து 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களிலிருந்தும் குறைந்தது ஒரு விளையாட்டு வீரராவது போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார். இந்தப் போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்ற முதல் மூன்று நாடுகளாக செருமனி, பெரிய பிரித்தானியா, நெதர்லாந்து இருந்தன. 2014ஆம் ஆண்டு உலக குதிரையேற்ற விளையாட்டுக்களில் வென்றதால் குதிரேயேற்ற நடைப்பயிற்சியில் இந்த நாடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் நான்கு விளையாட்டாளர்கள் தகுநிலைக்கு எட்டினர்.[6]

தெற்கு சூடான், கொசோவோ ஆகிய நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கெடுத்தன. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்ட அகதிகள் பிரச்சனை காரணமாகவும் மற்ற நாடுகள் எதிர்கொள்ளும் அகதிகள் பிரச்சனை காரணமாகவும் பத்து பேர் கொண்ட அகதிகள் ஒலிம்பிக் அணி உருவாக்கப்பட்டு பங்குகொண்டது.[7] இந்த அணி ஒலிம்பிக் கொடியின் கீழ் அணிவகுப்பில் கலந்துகொண்டது. குவைத் அரசு அந்நாட்டு ஒலிம்பிக் ஆணையத்தில் தலையிடுவதாக கூறி ஐந்து ஆண்டுகளில் இரண்டாம் முறையாக குவைத் 2015 அக்டோபர் மாதம் ஒலிம்பிக்கில் பங்கேற்பது தடை செய்யப்பட்டது.[8] இது முதன்முறை 2010இல் தடைசெய்யப்பட்டது அத்தடை 2012இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.


பங்கேற்கும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள்


நிகழ்ச்சி நிரல்

தொகு

மார்ச் 31, 2015இல் நுழைவுச் சீட்டுக்கள் விற்பனைத் துவக்கத்தின் போது வெளியான நிகழ்ச்சி நிரலை ஒட்டி உருவாக்கப்பட்டது.[9]

அனைத்து நாட்களும் பிராசிலியா நேரம் (ஒ.ச.நே - 03:00)
து.வி துவக்க விழா போட்டி நிகழ்வுகள் 1 இறுதிப் போட்டிகள் கா.வி காட்சி விளையாட்டு நி.வி நிறைவு விழா
ஆகத்து 3
புத
4
வியா
5
வெள்
6
சனி
7
ஞாயி
8
திங்
9
செவ்
10
புத
11
வியா
12
வெள்
13
சனி
14
ஞாயி
15
திங்
16
செவ்
17
புத
18
வியா
19
வெள்
20
சனி
21
ஞாயி
தங்கப் பதக்க நிகழ்வுகள்
  விழாக்கள் (துவக்கம் / நிறைவு) து.வி நி.வி
  வில் வித்தை 1 1 1 1 4
  தட களம் 3 5 4 5 5 4 6 7 7 1 47
  இறகுப்பந்தாட்டம் 1 1 2 1 5
  கூடைப்பந்தாட்டம் 1 1 2
  குத்துச்சண்டை 1 1 1 1 1 1 3 4 13
சிறுபடகோட்டம்   பனிச் சரிவாட்டம்


1 1 2 16
  குறுவிரையோட்டம் 4 4 4
மிதிவண்டி   சாலையோட்டம் 1 1 2 18
  தடகள ஓட்டம் 1 2 2 1 1 3
  பிஎம்எக்சு 2
  மலையோட்டம் 1 1
  நீரில் பாய்தல் 1 1 1 1 1 1 1 1 8
  குதிரையேற்றம் 2 1 1 1 1 6
  வாள்வீச்சு 1 1 1 1 2 1 1 1 1 10
  வளைதடிப் பந்தாட்டம் 1 1 2
  காற்பந்தாட்டம் 1 1 2
  குழிப்பந்தாட்டம் 1 1 2
சீருடற்பயிற்சிகள்   கலைநயம் 1 1 1 1 4 3 3 கா.வி 18
  சீரிசை 1 1
  குதித்தெழு 1 1
  எறிபந்தாட்டம் 1 1 2
  யுடோ 2 2 2 2 2 2 2 14
  தற்கால ஐந்திறப்போட்டி 1 1 2
  படகு விளையாட்டுகள் 2 4 4 4 14
  எழுவர் ரக்பி 1 1 2
  பாய்மரப் படகோட்டம் 2 2 2 2 2 10
  குறி பார்த்துச் சுடுதல் 2 2 2 1 2 1 2 2 1 15
  நீச்சல் 4 4 4 4 4 4 4 4 1 1 34
  ஒருங்கிசைந்த நீச்சல் 1 1 2
  மேசைப்பந்தாட்டம் 1 1 1 1 4
  டைக்குவாண்டோ 2 2 2 2 8
  டென்னிசு 1 1 3 5
  நெடுமுப்போட்டி 1 1 2
கைப்பந்தாட்டம்   கடற்கரை கைப்பந்தாட்டம் 1 1 4
  உள்ளரங்க கைப்பந்தாட்டம் 1 1
  நீர்ப் பந்தாட்டம் 1 1 2
  பாரம் தூக்குதல் 1 2 2 2 2 2 1 1 1 1 15
  மற்போர் 2 2 2 3 3 2 2 2 18
மொத்த இறுதி நிகழ்வுகள் 12 14 14 15 20 19 24 21 22 17 25 16 23 22 30 12 306
திரள் மொத்தம் 12 26 40 55 75 94 118 139 161 178 203 219 242 264 294 306
ஆகத்து 3
புத
4
வியா
5
வெள்
6
சனி
7
ஞாயி
8
திங்
9
செவ்
10
புத
11
வியா
12
வெள்
13
சனி
14
ஞாயி
15
திங்
16
செவ்
17
புத
18
வியா
19
வெள்
20
சனி
21
ஞாயி
தங்கப் பதக்க நிகழ்வுகள்

சின்னம்

தொகு

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான அலுவல்முறையான சின்னத்தை பிரேசிலிய விளம்பரவடிவமைப்பு முகமை தாதில் வடிவமைப்பு வடிவமைத்து திசம்பர் 31, 2010இல் 139 போட்டியிட்ட நிறுவனங்களை எதிர்த்து வெற்றியடைந்தது.[10] இந்தச் சின்னத்தில் மூவரின் கால்களும் கைகளும் இணைந்தும் மொத்தமாக பிரேசிலின் சர்க்கரைக்கட்டி மலையை ஒத்தும் அமைந்துள்ளது. தவிரவும் இது முப்பரிமாணத்தில் உள்ளது; இதை வடிவமைத்த பிரெட் கெல்லி "ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முப்பரிமாண சின்னம் இதுவே" எனக் கூறியுள்ளார்.[11]

 
2016 கோடைக்கால ஒலிம்பிக் நற்பேறுச் சின்னம்வினிசியசும் (இடது), 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நற்பேறுச் சின்னம் டாமும் (வலது)

நற்பேறு சின்னங்கள்

தொகு

பிரேசிலிய பாடலாசிரியர் வினிசியசு டி மோரேசை நினைவுறுத்தி கோடை ஒலிம்பிக்கின் சின்னம், வினிசியசு என்ற பெயரிடப்பட்டுள்ளது. வினிசியசின் வடிவம் பிரேசிலிய காட்டுயிரை எதிரொளிக்கின்றது; "பூனைகளின் விரைவியக்கம், குரங்குகளின் அசைவாட்டம், பறவைகளின் நளினத்தை" இணைக்கின்றது.[12] இந்த கதாபாத்திரத்தின் கைகளையும் கால்களையும் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் நீட்டலாம்.[12] இசைக்கலைஞர் டாம் சோபிமை நினைவுறுத்தி மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கின் சின்னம், டாம் பெயரிடப்பட்டுள்ளது. டாமின் வடிவமைப்பு பிரேசிலியக் காடுகளில் உள்ளத் தாவரங்களை எதிரொளிக்கின்றது; டாமின் தலையிலுள்ள இலைகளிலிருந்து எந்தப் பொருளையும் வெளியிழுக்கலாம்.[13]

நிறைவு விழா

தொகு

நிறைவு விழா மரக்கானா விளையாட்டரங்கத்தில் ஆகத்து 21, 2016 அன்று நடைபெற்றது.

சாதனைகள்

தொகு

2016 இரியோ ஒலிம்பிக்கில் பல்வேறு போட்டிகளில் 27 உலக சாதனைகளும் 91 ஒலிம்பிக் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன.

பதக்கங்கள்

தொகு

IOA - ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்ட தனி நபர். இது அகதிகள் குழு\அணி அல்ல. அகதிகள் அணியும் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டது. குவைத்தின் பாகித்-அல்-திகானி துப்பாக்கி சுடும் போட்டியில் (இரு டிராப்) தங்கம் வென்றார்.

 நிலை  தேஒகு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 46 37 38 121
2   ஐக்கிய இராச்சியம் 27 23 17 67
3   சீனா 26 18 26 70
4   உருசியா 19 18 19 56
5   செருமனி 17 10 15 42
6   சப்பான் 12 8 21 41
7   பிரான்சு 10 18 14 42
8   தென் கொரியா 9 3 9 21
9   இத்தாலி 8 12 8 28
10   ஆத்திரேலியா 8 11 10 29
11–87 மிகுதி தே.ஒ.குழுக்கள் 125 149 184 458
மொத்தம் (87 தேஒகு) 307 307 361 975
குறிப்பான நாடுகள்
 நிலை  தேஒகு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
13   பிரேசில் 7 6 6 19
67   இந்தியா 0 1 1 2

      நடத்தும் நாடு (பிரேசில்)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Rio 2016 Summer Olympics – Results and Video Highlights". olympic.org. 17 April 2018.
  2. http://www.usatoday.com/story/sports/columnist/nancy-armour/2016/07/26/rio-de-janeiro-olympic-games-water-security-zika/87586340/
  3. 3.0 3.1 "About Rio 2016 Summer Olympics". Rio 2016 Olympics Wiki. Archived from the original on 8 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Why Winter Olympics Bypass the Southern Hemisphere - Winter Olympics 2014".
  5. "ஒலிம்பிக் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் May 13, 2016.
  6. "Rio Olympics gets 1st qualified athletes". USA Today. Associated Press. 26 August 2014. http://www.usatoday.com/story/sports/olympics/2014/08/26/rio-olympics-gets-1st-qualified-athletes/14626231/. பார்த்த நாள்: 26 August 2014. 
  7. http://www.bbc.com/sport/olympics/35710578
  8. https://sports.yahoo.com/news/olympics-kuwait-ban-remains-force-ties-ioc-deteriorate-153651334--spt.html
  9. "Tickets". NOC*NSF. 31 March 2015. பார்க்கப்பட்ட நாள் 6 May 2015.
  10. Nudd, Tim (14 August 2012). "Hated the London 2012 Logo? You Might Like Rio 2016 Better Brazil's Tatíl Design tells story of its creation". Adweek. http://www.adweek.com/adfreak/hated-london-2012-logo-you-might-rio-2016-better-142723. பார்த்த நாள்: 14 August 2012. 
  11. "Rio 2016 motif is "first 3D logo in the history of the Olympics" says designer". Dezeen. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016.
  12. 12.0 12.1 "Meet the Rio 2016 Olympic and Paralympic Games mascots and help choose their names". Rio 2016. 23 November 2014. Archived from the original on 10 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-10. பார்க்கப்பட்ட நாள் 2016-08-21.
  13. "Rio 2016: Olympic and Paralympic mascots launched". bbc.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2014.

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
இரியோ டி செனீரோ

XXXI ஒலிம்பியாடு (2016)
பின்னர்