2017 ஆசிய தடகள போட்டி

2017 ஆசிய தடகள போட்டி என்பது ஆசிய தடகள போட்டியின் 22 ஆவது பதிப்பாகும். புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இது 2017 ஆம் ஆண்டு ஜூலை 6 முதல் 9 வரை நடைபெற்றது. புவனேஸ்வர் ஆசிய தடகள போட்டியை வழங்கும் மூன்றாவது இந்திய நகரமாகும். இந்த நிகழ்வில் 45 நாடுகளில் இருந்து சுமார் 800 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். [1][2]

2017 ஆசிய வாகையாளர்கள்
Athletics pictogram.svg
நடத்தும் நகரம்இந்தியா புவனேஸ்வர், இந்தியா
காலம்July 6–9
முதன்மை அரங்குகலிங்கா மைதானம்
பங்குபற்றுவோர்655 வீரர்கள்
45 நாடுகளில் இருந்து
நிகழ்வுகள்42
2019

2017 ஆசிய தடகள போட்டி முதலில் ஜார்கண்டிலுள்ள, ராஞ்சியில் நடத்த திட்டமிடப்பட்டது. ராஞ்சியில் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலையில், புவனேஸ்வர் இந்த நிகழ்விற்கான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[3] ஆசிய தடகள சங்கம் ஆசிய தடகள போட்டியை நடத்துவதற்காக புவனேஸ்வர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அபேய் சுமிரிவால் விரிவான விளக்கத்தை 2017 மார்ச்சில் வெளியிட்டார். ஆசிய தடகள போட்டியின் முந்தைய போட்டியானது சீனாவில், வூஹான் என்னுமிடத்தில் 2015 ஜூன் 3 முதல் 7 வரை நடைபெற்றது.

ஆசிய தடகள போட்டிகள் இரு ஆண்டுக்கு ஒரு முறை ஆசிய தடகள சங்கத்தால் Asian Athletics Association ஏற்பாடு செய்யப்படுகிறது.[4] ஆசிய தடகள போட்டிகள் இந்தியாவில் முதலாவதாக 1989 ஆம் ஆண்டு தில்லியிலும்,புனே நகரில் இரண்டாவதாகவும்,மூன்றாவதாக புவனேஷ்வரிலும் நடைபெற்றுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் 2017 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க நேரடியாக தகுதி பெறுவர். இவ்வாண்டு இந்தியா சார்பாக விளையாட மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.[5]

இடங்கள் மற்றும் உள்கட்டமைப்புதொகு

 
கலிங்கா மைதானம்

.

 
கலிங்கா மைதானத்தின் புதிதாக தயாரிக்கப்பட்ட செயற்கைத் தடம்

2017ன் ஆசிய தடகள போட்டி நிகழ்வு ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது. கலிங்கா மைதானம் 15,000 பார்வையாளர்கள் அமரும் திறன் உள்ளது.[6] இந்த புதிய மைதானத்தில் புதிய செயற்கை தடம் புதுப்பிக்கப்பட்டது. புகைப்பட விளக்குகள் மற்றும் பயிற்சிக்கு ஆயத்தம் செய்யும் இடவசதி ஆகியவை நிகழ்ச்சியை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ளன.[7] 2017 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்புகளை வழங்குவதில் இருந்து ராஞ்சி வெளியேற்றப்பட்ட பிறகு, 86 ஆவது ஆசிய தடகள சங்க கூட்டம், 22வது ஆசிய தடகள போட்டிகளை நடத்துமிடமாக புவனேஸ்வரை உறுதி செய்தது.[8] ஒடிசா அரசு கலிங்கா மைதானத்தை 90 நாட்களுக்குள் புதுப்பித்து நிகழ்வை நடத்துவதற்கு முடிவு செய்தது.

இலச்சினை மற்றும் சின்னம்தொகு

2017ன் ஆசிய தடகள போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னம் மே 8, 2017 அன்று வெளியிடப்பட்டது. ஆலிவ் ரிட்லி கடல் ஆமை, ஒடிசாவின் ருஷிகுலியா மற்றும் கஹிர்மாதா கடற்கரைகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ஒரு தனிச்சிறப்பு, அதன் சின்னமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[9] ஒடிசா மாநிலத்தின் 30 மாவட்டங்களை உள்ளடக்கி இப்போட்டிக்கான திரளணி நிகழ்வு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் நடத்தப்பட்டது.

நிகழ்வுகள்தொகு

2017 ஜூலை 5 ஆம் நாள் ஆசிய தடகள போட்டியின் தொடக்க விழாவில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். கலிங்க போர் மற்றும் பேரரசர் கார்வாலாவை சித்தரிக்கும் ஒரு செயலில் 400 ஒடிஸி நடன கலைஞர்கள் இருந்தனர்.[10] சங்கரபூரி நடனக் குழுவில், சங்கர மஹாதேவன் நிகழ்ச்சியில் ரங்கபாடி பாடலை பாடினார்.

ஊடக பிரசித்தம்தொகு

தூர்தர்ஷன் (டி.டி) மூலம் பிரசார் பாரதி 22ஆவது ஆசிய தடகள போட்டிகளுக்கான பிரத்யேக ஒளிபரப்பு சேவையை வழங்கியது. போட்டிகளுக்கான அரங்கத்தின் அனைத்து நிகழ்வுகளும் தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பதக்கப் பட்டியல்தொகு

  முதலிடம் பெற்ற நாடு வெளிர்நீலத்தில் குறிக்கப்பட்டுள்ளது
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   இந்தியா 12 5 12 29
2   சீனா 8 7 5 20
3   கசக்கஸ்தான் 4 2 2 8
4   ஈரான் 4 0 1 5
5   வியட்நாம் 2 2 0 4
6   தென் கொரியா 2 1 1 4
7   குவைத் 2 1 0 3
8   கிர்கிசுத்தான் 2 0 1 3
9   இலங்கை 1 4 0 5
10   தாய்லாந்து 1 2 2 5
11   பிலிப்பீன்சு 1 1 1 3
  சீன தைப்பே 1 1 1 3
13   தாஜிக்ஸ்தான் 1 0 0 1
  உஸ்பெகிஸ்தான் 1 0 0 1
15   கட்டார் 0 6 1 7
16   சப்பான் 0 5 9 14
17   ஆங்காங் 0 2 1 3
18   ஐக்கிய அரபு அமீரகம் 0 1 0 1
  மலேசியா 0 1 0 1
  வட கொரியா 0 1 0 1
21   சவூதி அரேபியா 0 0 3 3
22   சிரியா 0 0 1 1
  ஓமான் 0 0 1 1
Total 42 42 42 126

பங்கேற்ற நாடுகள்தொகு

இந்த நிகழ்வில் 45 நாடுகளில் இருந்து சுமார் 655 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்

 1.   ஆப்கானித்தான் – 7
 2.   வங்காளதேசம் – 17
 3.   பகுரைன் – 13
 4.   புரூணை – 5
 5.   பூட்டான் – 1
 6.   கம்போடியா – 2
 7.   சீனா – 58
 8.   சீன தைப்பே – 25
 9.   வட கொரியா – 4
 10.   கிழக்குத் திமோர் – 3
 11.   இந்தியா– 94
 12.   இந்தோனேசியா – 4
 13.   ஈரான் – 15
 14.   ஈராக் – 23
 15.   சப்பான் – 59
 16.   யோர்தான் – 6
 17.   கசக்கஸ்தான் – 32
 18.   குவைத் – 20
 19.   கிர்கிசுத்தான் – 6
 20.   லாவோஸ் – 2
 21.   லெபனான் – 8
 22.   மக்காவு – 5
 23.   மாலைத்தீவுகள் – 10
 24.   மலேசியா – 20
 25.   மங்கோலியா – 6
 26.   மியான்மர் – 3
 27.   நேபாளம் – 5
 28.   ஓமான் – 11
 29.   பாக்கித்தான் – 8
 30.   பலத்தீன் – 2
 31.   பிலிப்பீன்சு – 8
 32.   கட்டார் – 11
 33.   சவூதி அரேபியா – 21
 34.   சிங்கப்பூர் – 12
 35.   தென் கொரியா – 23
 36.   இலங்கை – 22
 37.   சிரியா – 2
 38.   தாஜிக்ஸ்தான் – 10
 39.   தாய்லாந்து – 30
 40.   துருக்மெனிஸ்தான்
 41.   ஐக்கிய அரபு அமீரகம் – 8
 42.   உஸ்பெகிஸ்தான் – 8
 43.   வியட்நாம் – 5
 44.   யேமன் – 6
 45.   ஆங்காங்
– 15

காட்சியகம்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. "22nd Asian Athletics Championship 2017". Asian Athletics Championship.
 2. "22ND ASIAN ATHLETICS CHAMPIONSHIPS 2017".
 3. "Bhubaneswar to host Asian Athletics Championships in July". Times of India. March 14, 2017. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/bhubaneswar-to-host-asian-athletics-championships-in-july/articleshow/57635120.cms. 
 4. "Asian Athletics Association".
 5. "22nd Asian Athletics Championship 2017". Athletics Federation of India (http://indianathletics.in).+8 April 2017. Archived from the original on 10 July 2017. https://web.archive.org/web/20170710110151/http://indianathletics.in/press-release/22nd-asian-athletics-championships-2017. பார்த்த நாள்: 10 July 2017. 
 6. http://www.orissapost.com/kalinga-stadium-to-get-10k-more-seats/
 7. http://www.firstpost.com/sports/asian-athletics-championship-odisha-cm-naveen-patnaik-unveils-events-official-mascot-olly-3566403.html
 8. "Bhubaneswar (IND) to host 22nd Asian Athletics Championship 2017 – 86th AAA Council meeting".
 9. "Organisers unveil official mascot of Asian Athletics Championship". The Indian Express. 12 June 2017. http://indianexpress.com/article/sports/sport-others/organisers-unveil-official-mascot-of-asian-athletics-championship-4700351/. பார்த்த நாள்: 5 July 2017. 
 10. Pradhani, Hemant. "Asian Athletics Championships: Over 500 artists to perform for opening ceremony". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/asian-athletics-championships-over-500-artists-to-perform-for-opening-ceremony/articleshow/59325715.cms. பார்த்த நாள்: 26 June 2017. 


வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2017_ஆசிய_தடகள_போட்டி&oldid=2726811" இருந்து மீள்விக்கப்பட்டது