2017 சியாப்பசு நிலநடுக்கம்

2017 சியாப்பசு நிலநடுக்கம் (2017 Chiapas earthquake) 2017 செப்டம்பர் 7 ஆம் நாள் பிற்பகல் 11.49 மணியளவில் மெக்சிகோவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கத்தின் மதிப்பானது உந்தத்திறன் ஒப்பளவில் 8.1 ஆக அறியப்பட்டுள்ளது. மெர்காலி செறிவு அளவில் அதிகபட்சமான IX (மிகத்தீவிரம்) என்ற அளவைத் தொட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோவின் சியாபசு மாநிலத்தின் தெகுயாந்தெபெக் வளைகுடாவின் தெற்கு பிஜிஜியாபன் என்ற இடத்திலிருந்து தோராயமாக 87 கிலோமீட்டர் (54 மைல்) தொலைவில் நிகழ்ந்துள்ளது.[3][4] இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் குவாத்தமாலாவின் பகுதிகளிலும் வசிக்கும் மக்களில் குறைந்தபட்சம் 60 பேராவது இதுவரை இதற்கு பலியாகியுள்ளனர்.

017 சியாப்பசு நிலநடுக்கம்
2017 Chiapas earthquake
2017 சியாப்பசு நிலநடுக்கம் is located in Mesoamerica
2017 சியாப்பசு நிலநடுக்கம்
நாள்7 செப்டம்பர் 2017 (2017-09-07)
தொடக்க நேரம்23:49:21 நநேவ
நிலநடுக்க அளவு8.1 Mw
ஆழம்69.7 கிமீ
நிலநடுக்க மையம்15°04′05″N 93°42′54″W / 15.068°N 93.715°W / 15.068; -93.715
பாதிக்கப்பட்ட பகுதிகள்மெக்சிக்கோ, குவாத்தமாலா[1]
அதிகபட்ச செறிவுIX (Violent)
ஆழிப்பேரலைஆம்
முன்னதிர்வுகள்1
பின்னதிர்வுகள்337
உயிரிழப்புகள்குறைந்தபட்சம் 61[2]

மெக்சிக்கோ நகரத்தில் உள்ள சில கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அதிர்வுக்குள்ளாகியுள்ளன. இந்த கட்டிடங்களில் உள்ள மக்கள் இதன் காரணமாக வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது 1 மீட்டர் (3 அடி 3 அங்குலம்) அளவிலான உயரமுடைய அலைகளை உண்டாக்கவல்ல ஆழிப்பேரலையையும் (சுனாமி) தோற்றுவித்துள்ளது.[5] சுற்றுப்புறப் பகுதிகளில் வசிப்போருக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.[6] மெக்சிக்கோவின் அதிபர் இந்த நிலநடுக்கத்தை நுாறாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என அழைத்துள்ளார். மேலும், இந்த நிலநடுக்கம் இதுவரை மெக்சிக்கோ நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களில் இரண்டாவது மிகப்பெரியதாகவும் உள்ளது. முன்னதாக, மெக்சிக்கோவில் 1787 ஆம் ஆண்டு 8.6 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்படு்டுள்ளது.[7] தற்போதைய மெக்சிகோவின் சியாபசில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமே 2017 ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட மிகத்தீவிரமான நிலநடுக்கமாகவும் உள்ளது.[8]

புவியத்தட்டு அமைப்பு தொகு

தெகுயாந்தெபெக் வளைகுடாவானது வட அமெரிக்க புவியத்தட்டின் கீழாக அமிழ்த்தப்பட்ட கோகோசு புவியத்தட்டின் குவிமைய எல்லையின் மேலாக அமைந்துள்ளது. இந்தக் கீழமிழ்தலானது (நிலவியல்) ஆண்டொன்றுக்கு 6.4 செமீ அல்லது 2.5 அங்குலம் என்ற அளவில் நிகழ்ந்துள்ளது.[9][10]

பின்னணி தொகு

செப்டம்பர் 6 ஆம் தேதி மெக்சிக்கோ நகரில் பல நிலநடுக்க அபாய எச்சரிக்கைகள்  தவறுதலாக விடுக்கப்பட்டு மக்கள் வெளியேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், நிலநடுக்கம் நிகழ்ந்ததோ, சியாபசு மாநிலமாகும். இது நிலநடுக்க முன்னெச்சரிக்கை மையங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டியது குறித்த ஒரு  எச்சரிக்கையை வழங்கியுள்ளது எனலாம்.[11]

நிலநடுக்கம் தொகு

மெக்சிக்கோவின் தேசிய நிலநடுக்கவியல் சேவை மையத் (National Seismological Service) (SSN) தகவலின் படி, நிலநடுக்க மையம் தெகுயாந்தெபெக் வளைகுடாவிலிருந்து சியாபசு, டோனாலாவின் தென்கிழக்காக 137 கிலோமீட்டர் தூரத்தில் இருந்திருக்கிறது.[12] ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) கூற்றுப்படி, சியாபசு மாகாணத்தின் பிஜிஜியாபனிலிருந்து தென்மேற்காக 87 கி.மீ.(54 மைல்) தொலைவில் நிலநடுக்க மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[4] மெக்சிக்கோவின் தேசிய நிலநடுக்கவியல் சேவை மையமானது இந்த நிலநடுக்கத்தின் அளவை உந்தத்திறன் ஒப்பளவில் 8.2 ஆக அறிவித்துள்ளது.[12] ஆனால், ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையானது முன்னதாக அறிவிக்கப்பட்ட 8.0 என்ற நிலநடுக்க அளவை திருத்தி 8.1 என்பதாக அறிவித்துள்ளது.[4] நிலநடுக்கமானது கோகோசு மற்றும் வட அமெரிக்க நிலவியல் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட நகர்வுகளின் காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்த நகர்வானது 10 மீட்டர் அல்லது 33 அடிகள் வரை இருந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[13]

சேதங்கள், இழப்புகள் தொகு

 
ஓக்சாகாவில் இசுட்மோ டே தெகுயாந்தெபெக்கில் ஒரு வீட்டிற்கு ஏற்பட்ட சேதம்

சியாபாசில் உள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன; மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளும் கூட சேதமடைந்தன.[14] ஓக்சாகாவில் இறந்த 45 நபர்கள் மற்றும் சியாபசுவில் இறந்த 12 நபர்கள் மற்றும் டபாசுகோவில் இறந்த 3 நபர்கள் இவர்களையும் உள்ளடக்கி குறைந்தபட்சம் 60 நபர்களாவது நிலநடுக்கத்தின் விளைவாக இறந்திருக்கலாம்[14] மெக்சிகோவின் உட்புறப் பகுதிகளுக்கான செயலகமானது சியாபசு மாகாணத்தில் உள்ள 122 நகராட்சிகளுக்கு அவசர நிலையை அறிவித்துள்ளது.[15] மேலும், மெக்சிகோவின் இராணுவம் பேரிடர் மீட்புப் பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளது.[16] 11 மாநிலங்களில் பள்ளிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளுக்காக மூடப்பட்டுள்ளன.[17]

மேற்கோள்கள் தொகு

  1. Cumes, William (September 7, 2017). "Temblor de 7.7 grados sacude Guatemala". Prensa Libre (in எசுப்பானியம்).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. MARK STEVENSON. "Death toll 61 in Mexico quake as hurricane hits Gulf coast". AP News. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Earthquake of magnitude 8.1 strikes off Mexico's Pacific coast". பிபிசி. 8 செப்டம்பர் 2017. http://www.bbc.com/news/world-latin-america-41197831. பார்த்த நாள்: September 8, 2017. 
  4. 4.0 4.1 4.2 "M 8.1 - 87km SW of Pijijiapan, Mexico". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. பார்க்கப்பட்ட நாள் September 7, 2017.
  5. "Mexico earthquake: mass evacuations after strongest tremor in a century". தி கார்டியன். September 8, 2017. https://www.theguardian.com/world/2017/sep/08/mexico-earthquake-warning-tsunami. பார்த்த நாள்: September 8, 2017. 
  6. "Tsunami Message Number 5 (0653 UTC Fri Sep 8 2017)". National Weather Service (United States). 8 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் September 8, 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. Richard Hartley, Parkinson (8-09-2017). "Most powerful earthquake in 230 years hits Mexico sparking tsunami". Metro. http://metro.co.uk/2017/09/08/tsunami-warning-as-magnitude-8-earthquake-rocks-mexico-6911929/. பார்த்த நாள்: September 8, 2017. 
  8. "World - M7+ in 2017". பார்க்கப்பட்ட நாள் September 8, 2017.
  9. Singh, S.K.; M. Ordaz; L. Alcantara; N. Shapiro; V. Kostoglodov; J. F. Pacheco; S. Alcocer; C. Gutierrez et al.. "The Oaxaca earthquake of 30 September 1999 (MW = 7.5)". Seismological Research Letters 71 (1): 67–78. doi:10.1785/gssrl.71.1.67. http://usuarios.geofisica.unam.mx/vladimir/papers_pdf/Singh_etal_SRL_2000.pdf. பார்த்த நாள்: September 8, 2017. 
  10. Taylor, Adam (September 8, 2017). "Mexico's cataclysmic history of earthquakes". The Washington Post. https://www.washingtonpost.com/news/worldviews/wp/2017/09/08/mexicos-worrying-history-of-earthquakes/. பார்த்த நாள்: September 8, 2017. 
  11. "Se activa, por error, alerta sísmica en CDMX; descartan sismo [Seismic alert in CDMX is activated by mistake; disregard earthquake]" (in Spanish). El Universal. September 6, 2017. http://www.eluniversal.com.mx/metropoli/cdmx/se-activa-por-error-alerta-sismica-en-cdmx-descartan-sismo. பார்த்த நாள்: September 7, 2017. 
  12. 12.0 12.1 "Reporte de Sismo: Sismo del día 07 de Septiembre de 2017, Chiapas (M 8.2)" (PDF) (in எசுப்பானியம்). National Seismological Service. 8 செப்டம்பர் 2017. Archived from the original (PDF) on 8 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  13. Osborne, Hannah (8 செப்டம்பர் 2017). "Biggest earthquake to hit Mexico in over a century moved fault by 32 feet". Newsweek. http://www.newsweek.com/mexico-earthquake-biggest-century-seismologist-aftershocks-661919. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2017. 
  14. 14.0 14.1 "Death toll rises to 60 in powerful Mexico earthquake". Associated Press. 9 செப்டம்பர் 2017. https://apnews.com/b7d17e0dbbff48a381a58b64353abe23/Death-toll-rises-to-60-in-powerful-Mexico-earthquake. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2017. 
  15. Mandujano, Isaín (8 செப்டம்பர் 2017). "La Segob declara "emergencia extraordinaria" en 122 municipios de Chiapas por sismo [Secretariat of the Interior declares "extraordinary emergency" in 122 Chiapas municipalities after earthquake]" (in Spanish). Proceso இம் மூலத்தில் இருந்து 9 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170909011429/http://www.proceso.com.mx/502358/la-segob-declara-emergencia-extraordinaria-en-122-municipios-chiapas-sismo. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2017. 
  16. Garcia, Dennis A. (8 செப்டம்பர் 2017). "Sedena aplica Plan DN-III-E en Chiapas y Oaxaca [Sedena applies DN-III-E plan in Chiapas and Oaxaca]" (in Spanish). El Universal இம் மூலத்தில் இருந்து September 9, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170909012151/http://www.eluniversal.com.mx/nacion/seguridad/sedena-aplica-plan-plan-dn-iii-e-en-chiapas-y-oaxaca. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2017. 
  17. Sherman, Cristopher; Castillo, Eduardo (8 செப்டம்பர் 2017). "'The house moved like chewing gum': Dozens killed in Mexico earthquake as country braces for hurricane". The National Post. Associated Press (Toronto). http://nationalpost.com/news/world/newsalert-earthquake-measuring-8-0-strikes-off-southern-mexico. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2017_சியாப்பசு_நிலநடுக்கம்&oldid=3729609" இலிருந்து மீள்விக்கப்பட்டது