24 மணி நேரம் (திரைப்படம்)

மணிவண்ணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

24 மணி நேரம் (24 Mani Neram) 1984 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். திரையரங்கில் 27 வாரங்கள் ஓடி வெற்றி பெற்றது.[1] எஸ். என். எஸ். திருமால் தயாரித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கியுள்ளார். மோகன்,[2] ஜெய்சங்கர், சத்தியராஜ், நளினி மற்றும் பலர் இப் படத்தில் நடித்துள்ளனர்.[3]

24 மணி நேரம்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎஸ்.என்.எஸ்.திருமால்
கதைமணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன், ஜெய்சங்கர், சத்தியராஜ், நளினி, வடிவுக்கரசி, சொப்னா, இளவரசி, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா, சி.எல்.ஆனந்தன், ரி.கே.எஸ்.சந்திரன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, ராமநாதன், சின்னி ஜெயந்த், சிலோன் நம்பியார், பயில்வான் ரங்கநாதன், ராஜ்ப்ரீத், சக்திவேல், ஜவகர், வீரபத்ரன், ராமச்சந்திரன், ராமகண்ணன், ஈஸ்வரன், மாஸ்டர் ஏ.ஜெயராம்
வெளியீடு1984
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளையராஜா இசையமைத்துள்ள இப் படத்துக்கான பாடல்களைப் புலமைப்பித்தன் எழுதினார்.[4][5] படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் இயக்குனர் மணிவண்ணனே எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Happy Birthday, Mohan: 'Payanangal Mudivathillai' to 'Mouna Ragam', six films of the lovable star that had a Silver Jubilee in theaters". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 August 2020. Archived from the original on 9 May 2021. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  2. Venkatachari, Shashank (20 January 2023). "10 Riveting Kollywood Thrillers That Take Place In A Day". Film Companion. Archived from the original on 30 January 2023. பார்க்கப்பட்ட நாள் 4 August 2023.
  3. "Tribute to Manivannan, Manivanna, Satyaraj". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
  4. "24 Mani Neram Tamil FIlm EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 9 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 September 2020.
  5. "24 Mani Neram (Original Motion Picture Soundtrack) – Single". Apple Music. 1 December 1984. Archived from the original on 26 June 2022. பார்க்கப்பட்ட நாள் 26 June 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=24_மணி_நேரம்_(திரைப்படம்)&oldid=4090206" இலிருந்து மீள்விக்கப்பட்டது