24 (தமிழ்த் திரைப்படம்)
24, இயக்குநர் விக்ரம் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முன்னணி வேடங்களில் சூர்யா, நித்யா மேனன் , சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
24 | |
---|---|
இயக்கம் | விக்ரம் குமார் |
தயாரிப்பு | சூர்யா |
கதை | விக்ரம் குமார் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | சூர்யா சமந்தா ருத் பிரபு நித்யா மேனன் அஜய் |
ஒளிப்பதிவு | கிரண் தியோஹன்ஸ் |
படத்தொகுப்பு | பிரவின் புதி |
கலையகம் | 2டி என்டேர்டைன்மென்ட் |
விநியோகம் | ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் |
வெளியீடு | 6 மே 2016 |
ஓட்டம் | 164 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹75 கோடி (US$9.4 மில்லியன்) ஐஅ$11[1] |
மொத்த வருவாய் | ₹157.10 கோடி (US$20 மில்லியன்) ஐஅ$23[2] |
நடிகர்கள்
- சூர்யா (ஆத்ரயா, மணி, சேதுராமன்)
- நித்யா மேனன் (பிரியா சேதுராமன்)
- சமந்தா ருத் பிரபு (சத்யபாமா)
- சரண்யா பொன்வண்ணன்
தயாரிப்பு
படத்தின் படப்பிடிப்பு 2015 ஏப்ரல் 9 ஆம் தேதி மும்பையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஏற்பாட்டில் தொடங்கியது.[3] இந்த செட் அமைக்க 4 கோடி செலவிடப்பட்டது.[4] இப்படத்துக்காக மும்பை, போலந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கணினிவரைகலைப் (graphics) பணிகள் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றவிட்டன. ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சூர்யா 3 வேடங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்மாதிரி ஒளிப்படம் மார்ச்சு 4, 2016 அன்று மாலை 6 மணியளவில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.[5]
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "'24' worldwide box office collection: Suriya-starrer grosses Rs. 157 crore". International Business Times. 24 May 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
- ↑ "157 Crores in Under 10 days for Suriya's 24". SS Music. Retrived on May 17 2016. Archived from the original on 2016-05-21. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
- ↑ "Surya Vikramkumar 24 Movie Details". myinfoindia.com. 10 April 2015.
- ↑ "4 Cr set for Suriya-Vikram Movie 24". southie.com. 20 March 2015. Archived from the original on 10 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2015.
- ↑ ரஹ்மான் அதிரடி.. சூர்யா அசத்தல்- இது '24' டீஸர் ஸ்பெஷல்!