மே 31
நாள்
(31 மே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 31 (May 31) கிரிகோரியன் ஆண்டின் 151 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 152 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 455 – உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார்.
- 1223 – செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது.
- 1293 – சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர்.[1][2]
- 1669 – சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார்.
- 1790 – ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது.
- 1859 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது.
- 1889 – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் உயிரிழந்தனர்.
- 1902 – இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
- 1910 – தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
- 1911 – டைட்டானிக் கப்பல் வட அயர்லாந்து, பெல்பாஸ்ட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1911 – மெக்சிக்கோ புரட்சி: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு நாட்டை விட்டு வெளியேறினார்.
- 1921 – அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 கறுப்பினத்தவர் கொல்லப்பட்டனர்.
- 1935 – பாக்கித்தானின் குவெட்டா நகரில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
- 1941 – ஆங்கில-ஈராக்கியப் போர்: ஐக்கிய இராச்சியம் ஈராக்கை மீளக் கைப்பற்றியது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆத்திரேலியாவின் சிட்னி நகரைத் தாக்கின.
- 1961 – தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1962 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
- 1970 – பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் காயமடைந்தனர்.
- 1973 – கெமர் ரூச் மீதான குண்டுத் தாக்குதல்களுக்கான அமெரிக்க நிதியுதவிகளைக் குறைக்க அமெரிக்க மேலவை வாக்களித்தது.
- 1973 – சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர்.
- 1981 – யாழ் நகரின் பல கட்டடங்கள், வாகனங்கள் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டன. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் தென்னிலங்கைக் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
- 1985 – வட அமெரிக்காவில் ஒகையோ, பென்சில்வேனியா, நியூயார்க், ஒன்றாரியோ ஆகிய இடங்களில் வீசிய சுழற்காற்றினால் 76 பேர் உயிரிழந்தனர்.
- 1991 – அங்கோலாவில் பல-கட்சி மக்களாட்சி முறைக்கான உடன்பாடு ஐநாவின் ஆதரவில் எட்டப்பட்டது.
- 1997 – கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் திறக்கப்பட்டது.
- 2004 – ஈழப்போர்: ஈழத்துப் பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 2005 – ஈழப்போர்: இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 2013 – சிறுகோள் "1998 கியூ.ஈ.2" அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தது.
- 2017 – காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1725 – அகில்யாபாய் ஓல்கர், மராட்டியப் பேரரசின் கீழிருந்த மல்வா இராச்சியத்தின் அரசி (இ. 1795)
- 1819 – வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1892)
- 1852 – ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (இ. 1921)
- 1912 – சியான்-ஷீங் வு, சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1997)
- 1912 – மார்ட்டின் சுவார்சுசைல்டு, செருமானிய-அமெரிக்க வானியற்பியலாளர் (இ. 1997)
- 1919 – எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1970)
- 1930 – கிளின்ட் ஈஸ்ட்வுட், அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1931 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975)
- 1941 – வில்லியம் நோர்டவுசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1945 – லோரண்ட் பாக்போ, ஐவரி கோஸ்ட்டின் 4வது அரசுத்தலைவர்
- 1948 – சிவெத்லானா அலெக்சியேவிச், நோபல் பரிசு பெற்ற பெலருசிய எழுத்தாளர்
- 1966 – ரொசான் மகாநாம, இலங்கைத் துடுப்பாளர்
- 1976 – கோலின் பார்ரெல், ஐரிய நடிகர்
இறப்புகள்
- 1809 – ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1732)
- 1832 – எவரிஸ்ட் கால்வா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1811)
- 1910 – எலிசபெத் பிளாக்வெல், ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர் (பி. 1821)
- 1960 – டி. பி. ஜாயா, இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1890)
- 1964 – பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டிடக் கலைஞர் (பி. 1909)
- 1973 – மோகன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (பி. 1916)
- 1976 – ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரியலாளர் (பி. 1910)
- 1981 – பார்பரா வார்ட், ஆங்கிலேயப் பொருளியலாலர், ஊடகவியலாளர் (பி. 1914)
- 1987 – ஜான் ஆபிரகாம், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1937)
- 2000 – அ. ஜெ. வில்சன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1928)
- 2004 – ஐயாத்துரை நடேசன், இலங்கை ஊடகவியலாளர் (பி. 1954)
- 2007 – எசு. எம். கமால், தமிழக வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர், பதிப்பாளர் (பி. 1928)
- 2009 – கமலா தாஸ், மலையாள எழுத்தாளர் (பி. 1934)
- 2022 – கே. கே, இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1968)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ Knoji. "History of Surabaya, East Java, Indonesia". indonesia.knoji.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-16.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "How a Javanese King Defeated a Powerful Mongolian Emperor? | Seasia.co". Good News from Southeast Asia இம் மூலத்தில் இருந்து 2018-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181016204759/https://seasia.co/2017/11/16/how-a-javanese-king-defeated-a-powerful-mongolian-emperor.