5+3+3+4
5 + 3 + 3 + 4 (அல்லது 5 + 3 + 3 + 2 + 2 அல்லது 3 + 2 + 3 + 3 + 2 + 2 ) என்பது தேசிய கல்வி கொள்கை 2020 இன் கீழ் உருவாகவுள்ள இந்தியாவின் புதிய பள்ளிக் கல்வி முறையினைக் குறிக்கிறது. பழைய முறை 10 + 2 என இருந்தது . 5 + 3 + 3 + 4 இதில் உள்ள 5 என்பது மாணவர்கள் அடிப்படை கல்வி கற்கும் ஆண்டுகளைக் குறிக்கிறது, இதில் அங்கன்வாடி, முன்பள்ளி அல்லது குழந்தைகள் காப்பகத்தினைக் குறிக்கிறது . இதைத் தொடர்ந்து 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 3 ஆண்டுகள் ஆயத்த கற்றல். இதைத் தொடர்ந்து 3ஆண்டுகல் அடங்கிய நடுநிலைக் கல்வி மற்றும் இறுதியாக 4 ஆண்டுகள் அடங்கிய இடைநிலைக் கல்வி (12 அல்லது 18 வயது வரை இருக்கும்). [1]
செயல்படுத்தல்
தொகுபுதிய கற்றல் முறை பின்வருமாறு செயல்படுத்தப்படும்: [2] [3]
- அடிப்படை நிலை: இது மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 3 ஆண்டு பாலர் கல்வி அல்லது அங்கன்வாடி, அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆரம்ப பள்ளியில் 1 மற்றும் 2 வகுப்பு கல்வியினை கற்பர். இது 3-8 வயதுடைய குழந்தைகளை உள்ளடக்கும். செயல்முறைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக இந்த கல்வி முறை இருக்கும்.
- தயாரிப்பு நிலை: 3 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட நிலை, இது 8-11 வயதுடையவர்களை உள்ளடக்கும். இது படிப்படியாக பேசுவது, வாசித்தல், எழுதுதல், உடற்கல்வி, மொழிகள், கலை, அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களைக் கொண்டிருக்கும்.
- நடுத்தர நிலை: 6 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நிலை, 11-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை உள்ளடக்கியது. இது கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் ஆகிய பாடங்கள் இருக்கும்.
- இரண்டாம் நிலை: 14 முதல் 18 வயது வரையிலான வகுப்புகளைக் கொண்ட நிலை இது, 9 முதல் 12 வயது வரையிலான மாணவர்கள் இதில் இருப்பர் . இது மீண்டும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 9 மற்றும் 10 வகுப்புகள் முதல் பிரிவாகவும், 11 மற்றும் 12 வகுப்புகள் இரண்டாம் பிரிவாகவும் உள்ளது. இந்த 4 ஆண்டுகள் உய்யச் சிந்தனை மறும் ஆழ்ந்து கற்றல் ஆகியவற்றை ஊக்கும் விதமாகவும் பலதரப்பட்ட கற்றலை ஊக்குவிப்பதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பல வகையான பாடங்கள் வழங்கப்படும்.
சான்றுகள்
தொகு- ↑ "New National Education Policy 2020: Explained - the breakdown of 10+2 to 5+3+3+4 system of school education". Times Now. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
- ↑ Kulkarni, Sagar (2020-07-29). "New policy offers 5-3-3-4 model of school education". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
- ↑ Kumar, Shuchita (31 July 2020). "New education policy: The shift from 10+2 to 5+3+3+4 system". Times Now. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.