சூலை 5
நாள்
(5 ஜூலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 5 (July 5) கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 328 – உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது.
- 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர்.
- 1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
- 1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
- 1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1807 – புவெனசு ஐரிசில் பிரித்தானியப் படையினரின் இரண்டாவது ஊடுருவலை உள்ளூர் துணை இராணுவத்தினர் தடுத்தனர்.
- 1809 – நெப்போலியப் போர்களின் மிகப் பெரும் சமர் பிரான்சுக்கும் ஆத்திரியப் பேரரசுக்கும் இடையில் வாக்ரம் என்ற இடத்தில் இடம்பெற்றது.
- 1811 – வெனிசுவேலா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1884 – செருமனி கமரூனை ஆக்கிரமித்தது.
- 1900 – ஆத்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் தூதரக உறவைத் துண்டித்தன.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: செருமனிப் படையினர் தினேப்பர் ஆற்றை அடைந்தனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் அணியின் தாக்குதல் கப்பல்கள் சிசிலி நோக்கி சென்றன (நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு, சூலை 10, 1943).
- 1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியம் மீது கூர்ஸ்க் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- 1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.
- 1950 – சியோனிசம்: யூதர்கள் அனைவரும் இசுரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இசுரேலில் கொண்டுவரப்பட்டது.
- 1954 – பிபிசி தனது முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.
- 1962 – பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
- 1971 – ஐக்கிய அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.
- 1975 – விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஆர்தர் ஆஷ் பெற்றார்.
- 1975 – போர்த்துக்கல்லிடம் இருந்து கேப் வர்டி விடுதலை பெற்றது.
- 1977 – பாக்கித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
- 1980 – சுவீடனைச் சேர்ந்த டென்னிசு வீரர் பியார்ன் போர்டி தொடர்ச்சியாக 5வது தடவை விம்பிள்டன் கோப்பையை வென்று (1976–1980) சாதனை படைத்தார்.
- 1987 – ஈழப் போர்: விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
- 1992 – இயக்கச்சியில் வை-8 விமானம் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1996 – குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.
- 1997 – ஈழப் போர்: இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரை திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1998 – செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை சப்பான் ஏவியது.
- 2004 – இந்தோனீசியாவில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
- 2009 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத் தலைநகர் உருமுச்சியில் கலவரங்கள் வெடித்தன.
- 2009 – ரொஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிசுத் தொடரில் ஆண்டி ரோடிக்கை வென்று 15வது பெருவெற்றித் தொடரைப் பெற்று சாதனை புரிந்தார்.
- 2016 – யூனோ விண்கலம் வியாழன் கோளை அடைந்து தனது 20-மாத ஆய்வை அக்கோளில் ஆரம்பித்தது.
பிறப்புகள்
- 1057 – அல் கசாலி, ஈரானிய மெய்யியலாளர் (இ. 1111)
- 1750 – அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1803)
- 1810 – பி. டி. பர்னம், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1891)
- 1853 – செசில் ரோட்சு, தென்னாப்பிரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 1902)
- 1857 – கிளாரா ஜெட்கின், செருமானிய மார்க்சியவாதி (இ. 1933)
- 1867 – ஏ. ஈ. டவுகிளாசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1962)
- 1888 – உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1970)
- 1902 – அ. கி. பரந்தாமனார், தமிழக எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், வரலாற்றாசிரியர் (இ. 1986)
- 1904 – எர்ணஸ்ட் மாயர், செருமானிய-அமெரிக்க உயிரியலாளர் (இ. 2005)
- 1918 – கே. கருணாகரன், கேரளத்தின் 7வது முதலமைச்சர் (இ. 2010)
- 1933 – ஜான் வி. எவான்சு, ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர்
- 1938 – பீலி சிவம், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2017)
- 1946 – பாலகுமாரன், தமிழக எழுத்தாளர்
- 1946 – இராம் விலாசு பாசுவான், இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (இ. 2020)
- 1949 – சிவசங்கர் மேனன், இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
- 1954 – ஜான் ரைட், நியூசிலாந்து துடுப்பாளர்
- 1958 – பில் வாட்டர்சன், அமெரிக்க கேலிப்பட ஓவியர், எழுத்தாளர்
- 1987 – அஸ்வின் ககுமனு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
- 1826 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர். (பி. 1782)
- 1833 – யோசெப் நிசிபோர் நியெப்சு, பிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளர் (பி. 1765)
- 1898 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசையாளர் (பி. 1839)
- 1965 – க. பசுபதி, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (பி. 1925)
- 1966 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1885)
- 1969 – வால்ட்டர் குரோப்பியசு, செருமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1883)
- 1970 – கு. அழகிரிசாமி, தமிழக எழுத்தாளர் (பி. 1923)
- 1987 – வல்லிபுரம் வசந்தன், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி (பி. 1966)
- 1994 – வைக்கம் முகமது பசீர், மலையாள எழுத்தாளர் (பி. 1908)
- 1997 – அ. தங்கதுரை, ஈழத்து அரசியல்வாதி (பி. 1936)
- 2006 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (பி. 1924)
- 2015 – நாம்பு ஓச்சிரோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1921)
- 2021 – ஸ்டான் சுவாமி, பழங்குடியின மக்களின் அறப்போராளி, இயேசுசபைத் துறவி (பி. 1937)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (வெனிசுவேலா, 1811)
- விடுதலை நாள் (அல்சீரியா, 1962)
- விடுதலை நாள் (கேப் வர்டி, 1975)
- கரும்புலிகள் நாள் (தமிழீழம்)