அசோகரின் மீரட் தூண்

பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில், கிமு 3-ஆம் நூற்றாண்டில், தற்கால உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரத்தில் நிறுவிய பிராமி எழுத்துக் கல்வெட்டுக் குறிப்புகளுடன் கூடிய 10 மீட்டர் உயரம் கொண்ட தூண் ஆகும். இத்தூண் மணற்கல்லால் நிறுவப்பட்டது. தில்லி சுல்தான் பெரேஸ் ஷா துக்ளக் ஆட்சியின் போது (1351 – 1388) இத்தூபியை, மீரட்டிலிருந்து எடுத்துச் சென்று தில்லியில் நிறுவினார். [1]பரூக்சியார் ஆட்சிக் காலத்தில் (1713–19) இத்தூபி 5 துண்டுகளாக உடைந்தது. 1887-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடைந்த தூணின் ஐந்து துண்டுகளை ஒன்று சேர்த்து நிறுவினர்.

பேரரசர் அசோகரின் மீரட் தூண், தற்போது தில்லியில் உள்ளது.
அசோகரது கல்வெட்டுக் குறிப்புகளுடன் கூடிஅ மீரட் தூணின் உடைந்த துண்டு

படக்காட்சியகம் தொகு

இதனையும் காண்க தொகு

 
 
உதயகோலம்
 
நித்தூர்
 
Jatinga
 
Rajula Mandagiri

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகரின்_மீரட்_தூண்&oldid=3309191" இலிருந்து மீள்விக்கப்பட்டது