இராம் பிரகாசு பம்பா

இராம் பிரகாசு பம்பா (Ram Prakash Bambah)(பிறப்பு 17 செப்டம்பர் 1925)[1][2] என்பவர் எண் கோட்பாடு மற்றும் தனி வடிவியலில் பணிபுரியும் ஓர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார்.

கல்வி மற்றும் பணி தொகு

பம்பா லாகூரில் உள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[2] பின்னர் முனைவர் பட்டப்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். 1950-ல் , லூயிஸ் ஜே. மோர்டெல் மேற்பார்வையின் கீழ் , கேம்பிரிச்சில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் இப்பட்டம் பெற்றார்.[2] இந்தியாவிற்குத் திரும்பிய இவர் 1952ஆம் ஆண்டு சண்டிகர், பஞ்சாப் பல்கலைக்கழகம், விரிவுரையாளராக பணியில் சேர்ந்து, 1957 ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.[2] பஞ்சாப் பல்கலைக்கழக பணியோடு அமெரிக்காவின் ஓகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1964 முதல் 1969வரை பணியாற்றினார். அமெரிக்காவில் [2] இவர் 1993ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வுபெற்றார்.[2]

பம்பா இந்தியக் கணித சங்கத்தின் தலைவராக 1969ஆம் ஆண்டும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1985 முதல் 1991 வரைப் பதவி வகித்தார்.[2]

விருதுகளும் கௌரவங்களும் தொகு

பம்பா இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் சகாவாக 1955ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2] 1979-ல் இவருக்கு சீனிவாச ராமானுசன் பதக்கம் வழங்கப்பட்டது.[2] 1974-ல் இந்திய அறிவியல் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1988-ல் இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் ஆர்யபட்டா பதக்கத்தையும்[2] இந்திய அரசின் பத்ம பூசண் விருதையும் பெற்றார்.[3]

மேற்கோள்கள் தொகு

 

  1. 1.0 1.1 Fellow profile, Indian Academy of Sciences, retrieved 2013-03-14.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Fellow profile பரணிடப்பட்டது 15 ஏப்பிரல் 2013 at Archive.today, Indian National Science Academy, retrieved 2013-03-14.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_பிரகாசு_பம்பா&oldid=3544115" இலிருந்து மீள்விக்கப்பட்டது