ஈரோடு புத்தகத் திருவிழா

ஈரோடு புத்தகக் கண்காட்சி அல்லது ஈரோடு புத்தகத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாநகரில் “மக்கள் சிந்தனைப் பேரவை” என்கிற அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் வ உ சி பூங்காவில் நடத்தப்படும் ஓர் புத்தகக் கண்காட்சியாகும். இப்புத்தகக் கண்காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. 2005 ஆம் ஆண்டு முதல் இந்தக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப் பெற்று வருகின்றது.

கண்காட்சி அரங்குகள் தொகு

12 நாட்கள் நடத்தப் பெறும் இக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக கடைகள் அமைக்கப்படும். இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும். பத்து நாட்கள் நடத்தப்படும் இக்கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை செயல்படும்.

2014 வருடத்திற்கான ஈரோடு புத்தகத் திருவிழா தொகு

ஆகஸ்ட் 1-இல் ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் துவங்கியது. ஆகஸ்டு 12 வரை நடைபெற்றது. ஆகஸ்டு 1 மாலை ஆறு மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்தார். "தமிழ்வேள் கோ.சாரங்கபாணி நினைவு உலகத் தமிழர் படைப்பரங்கம்' என்ற உலகத் தமிழர் படைப்புகளுக்கான அரங்கில் பிற நாடுகளில் வசிக்கும் படைப்பாளர்களின் படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

கருத்தரங்கம் தொகு

இக்கண்காட்சியில் மாலை 5. 30 மணிக்கு முக்கிய எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் போன்றவை இடம் பெற்றன.

திட்டமிடப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சிகள்: ஆகஸ்ட் 2014 தொகு

தேதி நேரம் தலைப்பு/நிகழ்ச்சி தலைவர்கள்
ஆகஸ்ட் 1 மாலை 6 மணி தொடக்க விழா இசையமைப்பாளர் இளையராஜா
ஆகஸ்ட் 2 மாலை 6 மணி தன்னம்பிக்கைத் தமிழ் சுகி.சிவம்
ஆகஸ்ட் 3 மாலை 6 மணி கவியரங்கம் கவிஞர் அப்துல் ரகுமான்
ஆகஸ்ட் 4 மாலை 6 மணி இன்னிசை நிகழ்ச்சி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினர்
ஆகஸ்ட் 5 மாலை 6 மணி இலக்கியத்தில் பெண்கள் சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன்
ஆகஸ்ட் 6 மாலை 6 மணி பட்டிமன்றம் பேராசிரியர் சாலமன் பாப்பையா
ஆகஸ்ட் 7 மாலை 6 மணி கசடறக் கற்க பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
ஆகஸ்ட் 8 மாலை 6 மணி அறிவே கடவுள் கவிஞர் வைரமுத்து
ஆகஸ்ட் 9 மாலை 6 மணி மண் பயனுற வேண்டும் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன்
ஆகஸ்ட் 10 மாலை 6 மணி வாழ்க்கை ஒரு வானவில் நடிகர் சிவகுமார்
ஆகஸ்ட் 11 மாலை 6 மணி கம்பன் என்றொரு மானுடம் ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ்
ஆகஸ்ட் 12 மாலை 6 மணி நிறைவு விழா முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

[2]

மேற்கோள்கள் தொகு

இதையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_புத்தகத்_திருவிழா&oldid=1920899" இலிருந்து மீள்விக்கப்பட்டது