தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், (பபாசி) - (The Bookseller`s and Publishers` Association of South India (BAPASI),[1] சென்னையில் 24 ஆகஸ்டு 1976 அன்று, பி. ஐ பதிப்பகத்தின் உரிமையாளர் மாத்யூ என்பவரால், சில பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பு 489 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சங்கத்தின் நோக்கம் தொகு

புத்தக ஆர்வலர்களின் வாசிப்பைப் பரவலாக்குவதற்காகவும் அதிகமான நூல்களை வெளியிடுவதற்காகவும், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடத்துகிறது.[2][3] இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறது. இச்சங்கம் இதுவரை சென்னையில் 36 ஆண்டுகளும், மதுரையில் 10 ஆண்டுகளும், கோவையில் 5 ஆண்டுகளும் புத்தகக் காட்சியை ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடத்தியுள்ளது.

புத்தகத் திருவிழாவில் விற்பனை செய்யப்படும் நூல்களுக்கு, விற்பனை விலையில் குறைந்த பட்சம் பத்து விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.justdial.com/Chennai/The-Booksellers-Publishers-Association-Of-South-India-%3Cnear%3E-Behind-Kamarajar-Arangam-Teynampet-West/044P7036443_BZDET
  2. மதுரையில் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்:250 அரங்கங்கள்; 7 செப்டம்பர் வரை நடக்கிறது
  3. மதுரையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

வெளி இணைப்புகள் தொகு