உடனடி கொடுக்கல் சேவை

உடனடி கொடுக்கல் சேவை (Immediate Payment Service, IMPS) இந்தியாவின் உடன்நிகழும் நிகழ்நேர வங்கிகளிடை மின்வழி நிதி மாற்றம் அமைப்பாகும். நகர்பேசிகள் மூலமாக இந்தச் சேவை வழங்கப்படுகின்றது. தேசிய மின்வழி நிதி மாற்றம் (NEFT ) மற்றும் நிகழ்நேர பெருந்திரள் தீர்வு (RTGS) போலன்றி இது ஆண்டின் அனைத்து நாட்களிலும், வங்கி விடுமுறை நாட்கள் உட்பட, 24/7 சேவை வழங்குகின்றது.

உடனடி கொடுக்கல் சேவை
செயலாக்கப் பகுதிஇந்தியா
நிறுவப்பட்டது22 நவம்பர் 2010
உரிமையாளர்இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம்
வலைத்தளம்ஐஎம்பிஎசு

இதனை இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் (NPCI) மேலாண்மை செய்கின்றது. இது ஏற்கெனவே உள்ள தேசிய நிதி மாற்றுகை பிணையத்தைப் பயன்படுத்துகின்றது. 2010இல் இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் தனது நான்கு உறுப்பினர் வங்கிகள் மூலமாக (பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவின் வங்கி (நிறுவனம்), இந்திய யூனியன் வங்கி & ஐசிஐசிஐ வங்கி) முன்னோட்டச் சேவையை சோதித்தது. அவ்வாண்டின் பிற்பகுதியில் யெசு வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கிக்கும் இதனை விரிவுபடுத்தியது. பொதுப் பயன்பாட்டிற்கு நவம்பர் 22, 2010 முதல் வெளியிட்டது.

பங்கேற்கும் வங்கிகளின் பட்டியல் தொகு

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடனடி_கொடுக்கல்_சேவை&oldid=2113751" இலிருந்து மீள்விக்கப்பட்டது