கனககிரி

கர்நாடக மாநில நகரம்

கனககிரி (Kanakagiri) இந்திய வரலாற்று தளமான கனகச்சலபதி கோயில் அமைந்துள்ள ஊராகும். இதை சுவர்ணகிரி என்ற பெயராலும் அழைப்பார்கள்.

கனககிரி
Kanakagiri

சுவர்ணகிரி
கொப்பள் மாவட்டம்
கனகசலபதி கோயில்
கனகசலபதி கோயில்
கனககிரி Kanakagiri is located in கருநாடகம்
கனககிரி Kanakagiri
கனககிரி
Kanakagiri
இந்தியாவின் கர்நாடகாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°33′N 76°24′E / 15.550°N 76.400°E / 15.550; 76.400
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்கொப்பள்
மக்கள்தொகை
 • மொத்தம்22,098
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்கன்னடம்,ஆங்கிலம், இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்583283
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA 37
அருகாமை நகரம்கங்காவதி
மக்களவை (இந்தியா) தொகுதிகொப்பள்
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிகனககிரி
இணையதளம்www.kanakagiri.in

புவியியல் தொகு

கர்நாடக மாநிலத்தின் கங்காவதி நகருக்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள கொப்பள் மாவட்டத்தில் கனககிரி அமைந்துள்ளது.[1]

கோயில் தொகு

கனகச்சலபதி கோயில் கனகிரியின் நாயக்கர்களால் கட்டப்பட்டது.[2] கோயிலின் அரங்குகள் மற்றும் தூண்கள் விசயநகர காலத்திலிருந்து வந்த தென்னிந்திய கட்டிடக்கலைக்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டுகளாகும். இங்குள்ள கோபுரங்கள் மற்றும் சுவர்கள் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கறுப்பு மெருகூட்டப்பட்ட கல், அரைச்சாந்து மாதிரிகளில் ராசா மற்றும் ராணி சிலைகளும் புராணகால உருவங்களின் மரச் சிலைகளும் இந்த அலங்காரத்தில் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள கனககிரி சமண தீர்த்தம் என்பது 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் மேற்கு கங்கை வம்சத்தால் கட்டப்பட்ட சமண கோவிலின் ஒரு வளாகமாகும். வெங்கடப்ப நாயக் கட்டிய அரசர்களில் குளியல் குளம் கனகிரியின் புறநகரில் கட்டப்பட்டுள்ளது.

கோட்டை தொகு

கனககிரியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஏமகுத்தா கோட்டை கந்துகலி குமார ராமாவின் கம்மடதுர்கா கோட்டைக்கு அடுத்ததாக உள்ளது.[3] இந்த கோட்டை 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட்தாகும். இந்த கோட்டையில் தசரா கொண்டாடும் துர்கா தேவியின் கோயில் உள்ளது.

உற்சவம் தொகு

கோயிலுடன் தொடர்புடைய கனககிரி உற்சவம் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில் இங்கு நடைபெறுகிறது.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Who cares for Kanakagiri..." பார்க்கப்பட்ட நாள் 2012-09-10.
  2. "Tourism, Kanakagiri". Archived from the original on 4 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-09-10.
  3. "Safe sanctuary". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-09-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனககிரி&oldid=3062693" இலிருந்து மீள்விக்கப்பட்டது