கம்பளிப் பூச்சி

கம்பளிப் பூச்சி (ஒலிப்பு) அல்லது கம்பளிப் புழு (ஒலிப்பு) (Caterpillar) என்பது வண்ணத்துப் பூச்சி போன்ற பூச்சியினங்களின் (Insects or Moth) முட்டை புழுவாகும். (குழந்தைகள், இப்புழுக்களை ஆயிரங்கால் பூச்சி என்றும் இரயில் பூச்சி என்றும் அழைப்பர்) கம்பளிப் புழுக்கள் இலைதழைகளை நன்கு உண்டு வளர்ந்த பின் கூட்டுப்புழு (Pupa) பருவத்தை அடைந்து, தன்னைச் சுற்றி கூடு கட்டி சில மாதங்கள் வாழ்ந்த பின்னர், கூட்டிலிருந்து இளம் பூச்சியாக உருவெடுத்து வெளியே வந்து பறக்கிறது. கம்பளிப் புழுக்கள் தோட்டங்களிலுள்ள பழங்கள், இலைகளை உண்பதால் வேளாண்மை உற்பத்தி பாதிக்கப்பபடுகிறது.

கம்பளிப் புழு

கம்பளிப் புழுவின் தோற்றம் தொகு

 
தற்காப்பிற்கான முட்கள் போன்ற முடிகள் கொண்ட கோஸ்டாரிக்கோ நாட்டு கம்பளி புழு

பல கம்பளிப் புழுக்களின் உடலில் முட்கள் போன்ற முடிகள் கொண்டுள்ளது. உடலின் அடியில் எண்ணற்ற சிறு கால்கள் கொண்டுள்ளது. (எனவே குழந்தைகள், இப்புழுக்களை ஆயிரங்கால் பூச்சி என்றும் இரயில் பூச்சி என்றும் அழைப்பர்)மேலும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப தன் உடலின் நிறத்தைக் கொண்டுள்ளது.[1]

தற்காப்பு தொகு

 
காண அருவருக்கத்தக்க முடிகள் கொண்ட கம்பளிப் புழுக்கள்

கம்பளிப் புழுக்களில் உள்ள புரதச் சத்து காரணத்தால், பல உயிரினங்கள், கம்பளி புழுக்களை உணவாக உண்டு வாழ்கிறது. கம்பளிப் புழுக்களில் சில இனங்கள் தங்களை எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள நச்சுத்தன்மையுடன், அருவருப்பான தோற்றத்துடன் காணப்படுகிறது. எதிரிகளைத் தாக்க நச்சுத்தன்மையுள்ள உமிழ் நீரைப் பீச்சி அடிக்கிறது. சில இனத்து கம்பளிப் புழுக்கள் எறும்பினங்களுடன் சேர்ந்து, அவைகளின் உதவியுடன் வாழ்கிறது. கம்பளிப் புழுக்கள் உடலில் எதிரிகள் பயப்படும்படியான பல நிறங்கள் கொண்டுள்ளது.[2]

நடத்தை தொகு

கம்பளி புழுக்கள், தன் உடல் எடையை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு இலைகளை உண்பதால் இவைகளை உண்ணும் இயந்திரங்கள் (eating machines) என்றழைப்பர். இதனால் கம்பளி புழுக்கள் இருபது நாள்களில் தன் உடல் எடையை இருபது மடங்கு அதிகரிக்கச் செய்து கொண்டு கூட்டுப்புழு (Pupa) பருவத்தை அடைகிறது.[3]

பட்டுத் தொழில் வளர்ச்சியில் தொகு

பட்டுப் பூச்சியினத்தின் கம்பளிப் புழுக்கள், பட்டு நூல் உற்பத்தி செய்ய பயன்படுவதால், அவைகள் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இக்கம்பளிப் புழுக்களுக்கு முசுமுசுக்கை மரத்தின் இலைகள் உணவாக வழங்கபடுகிறது. நன்கு வளர்ந்த கம்பளி புழுக்கள், கூட்டுப்புழு (Pupa) பருவத்தை அடைவதற்கு முன், தன் வாயிலிருந்து சுரக்கும் உமிழ் நீரால், தன்னைச் சுற்றி நூற்கண்டு போல் ஒரு நூ கூட்டைக் கட்டிக் கொண்டு அதில் பல நாட்கள் வாழ்கிறது. கூட்டுப்புழுவானது, பூச்சிப் பருவத்தை அடைவதற்கு முன் பட்டுப் புழுக்களின் கூடுகளைச் சுடு நீரில் போட்டு, மெல்லிய நீண்ட பட்டு நூல்களை எடுப்பர். இந்நூல்களைக் கொண்டே பட்டுச் சேலை நெய்யப்படுகிறது.

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Greene, E (1989). "A Diet-Induced Developmental Polymorphism in a Caterpillar". Science 243 (4891): 643–646. doi:10.1126/science.243.4891.643. பப்மெட்:17834231. 
  2. Lycaenid butterflies and ants. Australian museum (2009-10-14). Retrieved on 2012-08-14.
  3. Monarch Butterfly. Scienceprojectlab.com. Retrieved on 2012-08-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளிப்_பூச்சி&oldid=3355609" இலிருந்து மீள்விக்கப்பட்டது